இந்திய சினிமாவில் மலையாள திரைப்படங்கள் எப்போதும் தங்களுடைய வாழ்வியல் சார்ந்த கதைகள், இயல்பான மேக்கிங் மற்றும் அருமையான நடிகர்கள் மூலம் எப்போதும் தனித்து நிற்கிறது. 2022ம் ஆண்டு வெளியான சிறந்த 10 மலையாள திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

1. Jana Gana Mana
IMDB Rating: 8.1/10
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்து வெளியான திரைப்படம் “Jana Gana Mana”. முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
9. Nna than case Kodu
IMDB Rating: 8.1/10
இயக்குநர் ரத்தீஸ் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், காயத்ரி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படம் ‘Nna than case kodu’. என் மேல் கேஸ் கொடு என்பதுதான் தமிழாக்கம். சமகால அரசியல் சார்ந்த சம்பவங்களை நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பார் இயக்குநர்.
3. Hridayam
IMDB Rating: 8.1/10
இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், தர்ஷனா, கல்யாணி பிரியதர்சன் நடித்து வெளியான திரைப்படம் “Hridayam”. கல்லூரிக்கு பின் காதலும் வாழ்க்கையும் ஒரு மனிதனை எப்படி பக்குவப்படுத்து என்பதை அழகாக சொல்லி இருப்பார் இயக்குநர்.
4. Padavettu
IMDB Rating: 7.8/10
இயக்குநர் லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் ‘படவெட்டு’. இது பக்காவான அரசியல் படம். சாமர்த்தியமான திரைக்கதை மூலம் ரசிக்கும்படியான நல்ல திரைப்படத்தை கொடுத்திருப்பார்கள்.
5. Avasavyuham
IMDB Rating: 7.7/10
இயக்குநர் கிருஷாண்ட் இயக்கத்தில் வெளியான டாக்குமண்டரி சூப்பர் நேச்சுரல் காமெடி மூவி “Avasavyuham”. இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும். சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.
6. Bheeshma parvam
IMDB Rating: 7.7/10
இயக்குநர் அமல் நீரட் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வெளியான திரில்லர் திரைப்படம் “பீஸ்மா பர்வம்”. வசூல் ரிதியாக வெற்றி பெற்ற இந்த படம் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றது.
7. Ela veezha poonchira
IMDB Rating: 7.7/10
இயக்குநர் சகி கம்பிர் இயக்கத்தில் சோபின் சகிர் நடிப்பில் வெளியான மலையாள கிரைம் திரில்லர் திரைப்படம் Ela veezha poonchira. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
8. Rorschach
IMDB Rating: 7/10
இயக்குநர் நிஷாம் பஷீர் இயக்கத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி நடித்து வெளியான சைக்காலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘Rorschach‘. தியேட்டரில் மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.
9. Thallumala
IMDB Rating: 7/10
இயக்குநர் காளித் ரஹ்மான் இயக்கத்தில் டோவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் “Thallumala”. எப்போதும் சண்டையிட்டு கொள்ளும் இளைஞர்களை பற்றிய கதை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
10. Super Sharanya
IMDB Rating: 6.4/10
இயக்குநர் கிரிஸ் இயக்கத்தில் அர்ஜீன், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் “சூப்பர் சரண்யா”. முதல் பாதி மிகவும் ரசிக்கும்படி இருந்தாலும் படத்தின் 2வது பாதியில் முக்கிய கதையில் இருந்து திரைக்கதை விலகி சென்றிருக்கும், மொத்தத்தில் ரசிக்கும் படியான நல்ல திரைப்படம்.