இந்தியன் இன்சூரன்ஸ் மார்க்கெட்டில் இடம் பெற்றுள்ள முதல் பத்து சிறந்த பாலிசி நிறுவனங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

IRDAI அமைப்பின் 2020 -21 ஆண்டு மதிப்பீட்டின் படி சிறந்த பாதுகாப்பு தரும் இன்சூரன்ஸ் நிறுவங்களின் பட்டியலை வெளிட்டது. அதன்படி உள்ள முதல் பத்து நிறுவனங்கள் குறித்து கீழே காணலாம் எந்த முதலீடு செய்யும் போதும் அதன் விவரங்களை கவனமாக படித்துவிட்டு பின்னர் தொடங்குகள்.

Life Insurance Corporation Of India
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி) என்பது இந்தியாவின் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் லைஃப் இன்சூரன்ஸ், பென்சன் பிளான்ஸ், குழுந்தைகளுக்கான இன்சூரன்ஸ் மற்றும் யூனிட் லிங்க்டு போன்ற பல காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இந்தியா முழுவது 2048 இடங்களில் செயல்பட்டு வருகிறது.
மேலும் தெரிந்து கொள்ள: https://licindia.in/
HDFC Life Insurance Company
எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதில் பாதுகாப்பு, ஓய்வூதியம், சேமிப்பு, முதலீடு, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் திட்டங்கள் உள்ளன. இந்நிறுவனம் 372 கிளைகளில் மற்றும் 300 க்கும் அதிகமான பார்ட்னர்ஷிப் நிறுவனங்களுடன் இயங்கி வருகிறது.
மேலும் தெரிந்து கொள்ள: hdfclife.com
SBI Life Insurance Company
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மற்றும் பிரெஞ்சு நிதி நிறுவனமான பி.என்.பி பரிபாஸ் கார்டிஃப் இணைந்து 2001 ம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கினர். மிகக்குறைந்த விலையில் அனைத்து வகையான பாலிசிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் 987 கிளைகளை கொண்ட இந்நிறுவனத்தில் 28,000 க்கும் மேற்பட்ட கிளை பங்குதாரர்கள் உள்ளனர்.
மேலும் தெரிந்து கொள்ள: https://www.sbilife.co.in/
ICICI Prudential Life Insurance Company
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இந்தியாவில் முதலாக தொடங்கப்பட்ட தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லிமிடெட் [3] மற்றும் புரூடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் இணைந்து 2000ம் ஆண்டு தொடங்கினர், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் ஆயுள் காப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. டெர்ம் பிளான், பென்சன் பிளான், குழந்தைகள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
மேலும் தெரிந்து கொள்ள: iciciprulife.com
Max Life Insurance company
மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (முன்னர் மேக்ஸ் நியூயார்க் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்று அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவில் மேக்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் ஆக்சிஸ் வங்கிக்கு இணைந்து உருவாக்கிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். டெல்லியை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், வாழ்நாள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பலவிதமான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் பாலிசிகளை வழங்குகிறது.
மேலும் தெரிந்து கொள்ள: https://www.maxlifeinsurance.com/
Bajaj Allianz Life Insurance Company
பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று. பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட், மற்றும் அலையன்ஸ் எஸ்இ ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களின் கூட்டாகும். மொத்தம் 511 கிளைகள், 80,000+ முகவர்களுடன் (30 ஜூன் 2021 நிலவரப்படி) இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
மேலும் தெரிந்து கொள்ள: https://www.bajajallianz.com/
Kotak Mahindra Life Insurance Company
கோட்டக் மஹிந்திரா லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இந்தியாவில் உள்ள ஒரு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். 2001 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் சுமார் 15 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் 99,275 முகவர்களுடன் இந்தியாவின் சுமார் 167 நகரங்கள் 232 கிளைகளைக் கொண்டுள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள: kotaklife.com
Aditya Birla Sun Life Insurence
ஆதித்யா பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஆதித்யா பிர்லா கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் கனடாவில் உள்ள சர்வதேச நிதி சேவைகள் நிறுவனமான சன் லைஃப் ஃபைனான்சியல் நிறுவனத்துடன் இணைந்து உருவானது. இந்நிறுவனத்தில் டெர்ம் பிளான், பென்சன் பிளான், குழந்தைகள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் உள்ளன. 17 லட்சம்பாலிசி தாரர்களை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
மேலும் தெரிந்து கொள்ள: https://www.adityabirla.com/
Tata AIG Life Insurance Company
டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இந்தியாவில் உள்ளன் பொது காப்பீட்டு நிறுவனமாகும், இது டாடா குழுமம் மற்றும் அமெரிக்கன் இன்டர்நேஷனல் குரூப் (ஏஐஜி) ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தினர். டாடா குழுமம் காப்பீட்டு நிறுவனத்தில் 74 சதவீத பங்குகளையும், ஏ.ஐ.ஜி மீதமுள்ள 26 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள: https://www.tataaig.com/
Indiafirst life insurance company
இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளின் (பாங்க் ஆப் பரோடா) கூட்டு முயற்சி. ம்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் ரூ.663 கோடி பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. காப்பீட்டு நிறுவனம் செயல்படத் தொடங்கிய முதல் நான்கரை மாதங்களில் 2 பில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்தது.
மேலும் தெரிந்து கொள்ள: indiafirstlife.com