திரையை இரண்டாக பிரித்து இரண்டு பக்கங்களிலும் வேறு வேறு கதை, வித்தியாசமான முயற்சியில் வெளியாகி உள்ள பிகினிங் படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கதை
இடது பக்க ஸ்கிரினில் அம்மா அரவனைப்பில் வளரும் நாயகன் (வினோத் கிஷன்), அவது அம்மா அவரை பாதுகாத்து வருகிறார். வலது பக்கத்தில் நாயகியை (கெளரி ஜி கிஷன்) கடத்தி சென்று வைத்திருக்கும் கும்பல். இந்த இரண்டு ஸ்கிரினிலும் நடந்து வரும் கதை ஒரு மையப்புள்ளியில் இணைகிறது.அதன் பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
விமர்சனம்
பிகினிங் இந்த படத்தை இயக்கியுள்ளார் ஜெகன். வினோத் மற்றும் கெளரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி. ஆடியன்ஸ் இரண்டு கதைகளையும் ஒரே நேரத்தில் பாலோ செய்ய வேண்டும். வினோத் கிஷன் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கெளரியும் இந்த கதைக்கு ஏற்ற ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கதை இரண்டு புறமும் ஒரே நேரத்தில் நகர்வதால் ஆடியண்ஸ்க்கு எந்த பக்க கதையை பாலோ செய்வது என்ற குழப்பம் வரலாம். இயக்குநர் ஜெகன் சீன் மேக்கிங் சில இடங்களில் ரசிக்கும் படி இருந்தாலும், ரைட்டிங்கில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம், சுவாரசியமான காட்சிகளை சேர்த்திருக்கலாம் என்று தோன்றியது.
சில இடங்களில் இது குறும்படம் அல்லது சீரியஸ் பார்ப்பது போல் தோன்றியது. வினோத் மற்றும் கெளரியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இந்த இருவரால்தான் அந்த கதையை நாம் ஸ்கிரினில் பாலோ செய்ய முடிந்தது. ஆனால் மற்றவர்கள் வரும் போது மொத்த குழப்பம் ஏற்பட்டது.
மொத்தமாக, இந்த படம் ஒரு எக்ஸ்பிரிமண்டல் படம். திரைக்கதை, ரைட்டிங்கில் இன்னும் முயற்சி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இணைய தலைமுறை ரேட்டிங்: 2.5/5