பாக்யலட்சுமி சீரியல் புகழ் ‘எழில்’ விஷால் மற்றும் தெலுங்கு யூட்யூப் பிரபலம் தீப்தி சுனைனா நடித்துள்ள “எமோனே” பாடல் இணையத்தில் வைரலாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியலில் இவருக்கு அதிக ரசிகர்கள் என்றே கூறலாம். அந்த அளவில் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் விஷால் (எழில்). அவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மிகவும் திறமை வாய்ந்த இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன.
இந்நிலையில், தெலுங்கில் பிரபலமான நடிகை தீப்தி சுனைனா உடன் இணைந்து அவர் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இந்த பாடல் புதன்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீப்திக்கு தெலுங்கில் மிகுந்த வரவேற்பு உண்டு அவரது பாடல்கள் மில்லியன்களை தாண்டி பார்வையாளர்களை பெற்று வரும். இன்று வெளியாகி உள்ள இந்த பாடல் குறைந்த நேரத்தில் மில்லியன் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணம் செய்யும் ஜோடிகள் திருமணத்திற்கு பிறகு புரிந்து கொண்டு காதலிப்பதை அழகான இசையுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். விஷால் மற்றும் தீப்தி சுனைனாவின் ஜோடி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. சொல்ல வரும் விஷயத்தை அவர்களின் மெச்சூர்டான நடிப்பால் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
‘எமோனே’ இந்த பாடலை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் வினய் சண்முக். இசையமைத்துள்ளார் விஜய் புல்கனின். இந்த பாடலை பார்த்த விஷால் ரசிகர்கள் தமிழில் எப்போது படம் பண்ணுவீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர். விஷாலை தொடர்ந்து வெள்ளித்திரையில் பார்க்க பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.