ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் “அவதார் – தி வே ஆஃப் வாட்டர்” இன்று உலகம் முழுவதும் 52,000 தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது.

2009 ம் ஆண்டு அவதார் முதல் பாகம் வெளியாகி உலகில் உள்ள அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதிலும் அதிக தியேட்டர்களில் ரிலீஸாகி புதிய சாதனையையும் படைத்துள்ளது.
2022 ம் ஆண்டு இந்தியாவில் கே.ஜி.எஃப் சாதனையை முறியடித்து, முதல் 3 நாட்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்று தீர்ந்துள்ளது. வட அமெரிக்காவில் மட்டும் இந்த திரைப்படம் 38 மில்லியன் US டாலருக்கு முன்பதிவில் கலெக்ட் செய்துள்ளது. அவதார் படத்தின் முதல் பாடம் சுமார் 77 கோடி மில்லியன் US டாலர் வசூலை முதல் வாரத்தில் கலெக்ட் செய்ததாம். அதைவிட இரண்டாம் பாகம் டபுள் மடங்கு கலெக்ட் செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்,
முதல் பாகத்தை போலவே மிகவும் பிரம்மாண்டமான டெக்னிக்கலாகவே சவுண்டான ஒரு படமாகவே உள்ளது. கிராஃபிக்ஸ் காட்சிகள் மிகவும் பிரமிப்பாக உள்ளது. நடிகர்கள் அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். கேமரா, எடிட்டிங், சவுண்ட், மியூசிக் என அனைத்து துறைகளும் தரமான அவுட்புட் கொடுத்துள்ளார்கள்.
இப்போது கதைக்குள் வருவோம், இந்த படம் ரசிகர்களுக்கு ஒர்க் அவுட் ஆவது கஷ்டம் தான். முதல் பாகத்தை பார்க்காமல் வருபவர்களுக்கு புரியாமல் போக வாய்ப்பு இருக்கலாம். ஜேம்ஸ் கேமரூன் முதல் பாகத்தை எப்படி வடிவமைத்திருந்தாரோ அதே போலவே இந்த படத்திலும் லொக்கேஷன், வடிவமைப்பு என காட்சிகள் புதிதாக பார்க்கும் அனுபவம் இல்லை. வில்லன் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்று தோன்றியது.
இந்த படத்தின் கடைசி ஒரு மணிநேரம் மிகவும் சிறப்பாக இருக்கும் ஆனால் முதல் 2 மணி நேரம் நமது பொறுமையை சோதிக்கத்தான் செய்கிறது. அதனை ட்ரிம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.
3 மணி நேரம் 12 நிமிட ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கண்ண்டம் ஆகிய மொழிகளில் இந்தியாவில் ரிலீசாகி உள்ளது. 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி, 4டிஎக்ஸ் ஆகிய டெக்னாலஜியில் வெளியாகிறது. இந்தியாவில் முதல் வாரம் 40 கோடி வசூலை பெறும் என்று கணிக்கிறார்கள்.
2009ம் ஆண்டு “அவதார்” முதல் பாகம் இந்திய ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணைய தலைமுறை ரேட்டிங்: 3.7/5
One thought on “‘Avatar: The Way of Water’ படம் எப்படி இருக்கு?”