2023ம் ஆண்டு வெளியாக உள்ள Apple Products

Reading Time: 2 minutes

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் விஆர் ஹெட்செட்டை 2023ம் ஆண்டு வெளியிட உள்ளது. மேலும் ஹோம்பாட், 15 இன்ச் மேக்புக் ஏர், ஐமேக், மேக் ப்ரோ ஆகிய பொருட்களையும் வெளியிட உள்ளதாக தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் 2022ம் ஆண்டு நிறைய பிராடக்டுகளை லாஞ்ச் செய்தது. ஐபோன் எஸ்இ 3 வது ஜெனரேஷனை மிகவும் குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்தியது. எம் 2 சிப் மற்றும் மேக்சேஃப் சார்ஜிங் கொண்ட புதிய மேக்புக் ஏர் அறிமுகப்படுத்தியது, மற்றும் டைனமிக் ஐலேண்ட், 48 எம்பி கேமரா மற்றும் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களுடன் ஐபோன் 14 ப்ரோ மொபைலை அறிமுகம் செய்திருந்தது.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் iPhones, iPads தவிர மற்ற புதிய பிராடக்டுகளை வெளியிட உள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்

15 இன்ச் மேக் புக் ஏர்

ஆப்பிள் நிறுவனம் லாஞ்ச் செய்ய திட்டமிட்டுள்ள 15 இன்ச் மேக்புக் ஏர் தற்போதைய மேக்புக் ஏர் போன்ற வடிவமைப்புடன் எம் 2 சிப்செட் மூலம் வெளியாக வாய்ப்புள்ளது. செயல்திறனை மேலும் மேம்படுத்த, பெரிய மேக்புக் ஏர் ஆக்டிவ் கூலர் சிஸ்டத்துடன் வெளியிட வாய்ப்புள்ளது.

Reality Pro VR ஹெட்செட்

ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் “ரியாலிட்டி ப்ரோ” விஆர் ஹெட்செட்டை அறிவிக்க வாய்ப்புள்ளது, இது உலகின் மிகவும் திறன் கொண்ட முழுமையான மெய்நிகர் ரியாலிட்டி ஹெட்செட்டாக இருக்கும். இது ஜனவரி 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வரக்கூடும்,

Mac Pro with Apple Silicon

மேக் ப்ரோ மட்டுமே ஆப்பிள் இன்டெல் இருந்து ஆப்பிள் சிலிக்கான் இயங்குதளத்திற்கு மாற வேண்டிய ஒரே ஒரு பிராடக்ட். ஆப்பிள் சிலிக்கான் எம் 2 எக்ஸ்ட்ரீம் உடன் மேக் ப்ரோவை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது, 40-core CPU, 128-core GPU மற்றும் 256GB வரையிலான மெமரி கொண்டது, ஆப்பிள் நிறுவனம் இதுவரை செய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த பிராடக்டாக வெளிவர உள்ளது.

M3-powered iMac

ஆப்பிள் நிறுவனம் M2-powered iMac மாடலை தவிர்க்க வாய்ப்புள்ளது, மேலும் Silicon M3-powered iMac ஐமேக் ஆல்-இன்-ஒன் டெஸ்க்டாப் கணினியை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைல் மற்றும் டிசைன் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும், இது தற்போதைய M1-ஐமேக் போலவே தோற்றமளிக்கும் மற்றும் பல நிறங்களில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.

நெக்ஸ்ட் ஜெனரேசன் ஹோம்பேட்

டிஸ்ப்ளே வசதி கொண்ட ஹோம் பாட் உடன், ஆப்பிள் ஒரு வழக்கமான ஹோம்பாட்டையும் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது, இது பல சிறந்த ஆடியோ ஆப்சன்களுடன் அடுத்த வருடத்தின் முதல் குவாட்டரில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: