ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் 5G ஸ்மார்ட்போன் சேவையை தங்களது மொபைல்களில் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமாக உள்ளன் புதிய ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 12 வரிசைகளில் 5G சேவை வசதி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Apple iPhone- ல் 5 G சேவையை எப்படி பயன்படுத்துவது?
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர்க் இணைப்புகளுடன் ஆப்பிள் தனது ஐபோன் 12 சாதனங்களில் 5 ஜி சேவையை தொடங்கியுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் அதன் “கேரியர் பார்ட்னர்கள்” என ஆப்பிள் தெரிவித்துள்ளது . பயனர்கள் iOS 16.2 க்கு தங்களது Iphone ஐ புதுப்பிக்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட icloud data பாதுகாப்பு, ஹோம் ஸ்கிரீன் லைவ், ஆப்பிள் மியூசிக் புதிய க்ரோக்கி ஆகிய வசதிகளுடன் அப்டேட் வர உள்ளது.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம், iOS 16 Beta பயனர்களுக்கு இந்தியாவில் டிரையல் முறையில் 5G சேவையை வழங்கியது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பயனர்களுக்கு மட்டுமே இந்த டிரையல் சேவை வழங்கப்பட்டது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சிறப்பான தரத்துடன் கூடிய 5G சேவையை வழங்க தனது கேரியர் பார்ட்னர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 5G சேவையை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது, ஆப்பிள், சாம்சங் மற்றும் ஒன் ப்ளஸ் அனைவரும் இந்த சேவையை தங்களது டிவைஸ்களில் வழங்க முடிவு செய்துள்ளது.
Iphone பயனர்கள் சூப்பர் பாஸ்ட் டவுன்லோடு மற்றும் அப்லோட் மற்றும் சிறத்ந் உணர்வை இந்த 5G சேவை மூலம் உணர்வார்கள். அதி வேக கண்டென் ஷேரிங் மற்றும் அதிக தரத்தில் ஸ்டிரீமிங் இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 250 கேரியர் பார்ட்னர் மற்றும் 70 மார்கெட்களில் 5G சேவையை Iphone நிறுவனம் தொடங்கி உள்ளது. அதிகரித்துள்ள மொபைல் பயன்பாடுகளினால் அதிக நிறுவனங்கள் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய மும்முரம் காட்டி வருகின்றனர்.