Apple ஹோம்பேட் (2G) ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை மற்றும் என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கரை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் சிரி தொழில்நுட்பம் , ஆப்பிளின் புதிய அப்டேட்டுகள் மற்றும் ஸ்பாடில் ஆடியோ டிராக்குகளை கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.
Apple ஹோம்பேட் (2G) ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை
ஆன்லைனில் இப்போது இந்த ஹோம்பாடை ப்ரீஆர்டர் செய்யலாம், பிப்ரவரி 3ம் தேதி வெள்ளிக்கிழமை டெலிவரி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. iPhone SE (2nd generation)-க்கு பிறகு வந்த மொபைல்கள் அல்லது iPhone 8 டிவைஸ்களில் சப்போர்ட் செய்யும், ஐஓஎஸ் 16.3 அல்லது அதற்குப் பிறகு வந்த அப்டேட்டுகளில் இயங்கும்; iPad Pro, iPad (5th generation) , iPad Air (3rd generation), மற்றும் iPad mini (5th generation) மாடல்கள் மற்றும் அதற்கு பிறகு வந்த டிவைஸ்களில் இயங்கும்.
Apple ஹோம்பேட் (2G) ஸ்மார்ட் ஸ்பீக்கரை apple.com/in/store என்ற தளத்தில் ப்ரீ ஆர்டர் செய்யலாம், பிப்ரவரி 3ம் தேதிக்கு பிறகு டெலிவரி தொடங்கும். இதன் விலை ரூ. 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Apple ஹோம்பேட் (2G) ஸ்மார்ட் ஸ்பீக்கர் வசதிகள்
புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் வெள்ளை மற்றும் மிட்நைட் கலர்களில் வருகிறது. இது 100 சதவீதம் ரீசைக்கிள் செய்யப்பட்ட மெஷ் துணியால் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த டிவைஸில் உள்ளமைக்கப்பட்ட பாஸ்-ஈக்யூ மைக் மற்றும் அடிப்பகுதியைச் சுற்றி ஐந்து ட்வீட்டர்களுடன் 20 மிமீ டிரைவர் உள்ளது.
பயனர்கள் ஆப்பிள் மியூசிக் மூலம் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை கேட்கலாம், ஸ்பேஷியல் ஆடியோவை சிங்கிள் ஹோம்பாட் அல்லது ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர் மூலம் கேட்கலாம் ஆப்பிள் 4 K டிவியில் கணெக்ட் செய்து ஹோம் தியேட்டர் அனுபவத்தை பெறலாம். “Hey Siri,” என்று கூறி உங்களுக்கு தேவையான பாடல்கள், விவரங்கள் மற்றும் வேறு டிவைஸ்களுடன் எளிதாக கணெக்ட் செய்து கொள்ளலாம்.
ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை வைத்து ஸ்டீரியோ இணையை உருவாக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 4 K டிவி, ஐபோன் என அனைத்து டிவைஸிலும் கணெக்ட் செய்யலாம். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆறு குரல்கள் வரை அடையாளம் காணும், எனவே வீட்டின் ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் தனிப்பட்ட பிளேலிஸ்ட்கள், நினைவூட்டல்கள் கேட்கலாம் மற்றும் காலண்டர் நிகழ்வுகளை அமைக்கலாம்.
ஸ்மார்ட் ஸ்பீக்கர் வெதர் சென்சாருடன் வருகிறது மற்றும் புகை மற்றும் கார்பன் மோனாக்சைடு அலாரங்களைக் கேட்கலாம், அனைத்து ஸ்மார்ட் ஹோம் தகவல்தொடர்புகளும் எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் செய்யப்பட்டவை, எனவே ஆப்பிள் உட்பட யாராலும் உங்கள் தகவல்களை எடுக்க முடியாது, பாதுகாப்பாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.