கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்று இமிடேட் செய்து அசத்திய அல்-நாசர் வீரர் ஆண்டர்சன் தலிஸ்காவின் மகன், அதை பார்த்து ரசித்த ரொனால்டோ. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிக்னேஞ்சர் ஸ்டெப்பான “Siiuuu” அனைவராலும் ஈர்க்கப்பட்டு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அல்-நாசர் வீரர் ஆண்டர்சன் தலிஸ்காவின் மகன் அவர் முன்பே அவரை போல அந்த கொண்டாட்ட ஸ்டெப்பை போட்டு அசத்தியுள்ளார். இதனை ரொனால்டோவும் ரசிக்கும் காட்சி ட்விட்டரில் வெளியானது. அதனை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆண்டர்சன் மகன் ரொனால்டோவின் ரசிகன் அவர் முன்பே அதை செய்து காட்டியது அனைவரையும் மகிழச் செய்தது. “நன்றி, லெஜண்ட். நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன்.” இந்த கேப்ஷனுடன் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் எரிக் டென் ஹேக் உடனான கருத்து வேறுபாட்டால் ரொனால்டோவின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அல்-நாசருக்கு மாற்றப்பட்டது. டிவி பிரபலம் பியர்ஸ் மோர்கனுடனான நேர்காணல் உதவவில்லை, இரு தரப்பினரும் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்தனர்.