எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள “துணிவு” படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிரேம், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு வங்கியில் ரூ.1500 கோடி பணம் உள்ளது, அதில் ரூ. 500 கோடியை கொள்ளையடித்தாலும் யாராலும் போலிசிடம் கம்ப்ளைண்ட் கொடுக்க முடியாது. அந்த பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் செல்கிறது. அதன் பிறகு அடுத்தடுத்து நடந்த சம்பவங்களே இந்த படத்தின் மீதிக்கதை.
இந்த படம் அஜித்துக்கான ஒன் மேன் ஷோ என்றே சொல்லலாம். நெகட்டிவ் ஷேடில் சும்மா தெறிக்க விட்டுள்ளார். முதல் பாதியை அஜித் மட்டும் தாங்கி பிடித்துள்ளார். அஜித்தின் காமெடி மற்றும் வங்கிக்குள் வரும் டான்ஸ் போர்ஷன்ஸை தல ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், மோகன சுந்தரம் உள்ளிட்ட அனைவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
எச்.வினோத்தின் ரைட்டிங் சரியாக இருந்தது. முதல் பாதி வேகமாக நகர்ந்தது. 2வது பாதியில் இன்று அனைவருக்கும் தேவையான சோஷியல் மெசேஜை பாடம் எடுக்கும் விதமாக சொல்லாமல், கதையோடு நகர்த்துவது பலம். மேலும் நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு காட்சிகளை ஹாலிவுட் ரேஞ்சில் காட்டுகிறது. ஜிப்ரானின் பாடல்கள், பிண்ணனி இசை சிறப்பாக உள்ளது. வங்கி கொள்ளை காட்சிகளில் எடிட்டர் வேலுக்குட்டியின் எடிட்டிங் ஒர்க்கை பாராட்டலாம்.
படத்தில் ப்ளஸ் சொல்லியாச்சு, இப்போ மைனஸ் பற்றி பேசலாம்.
எச்.வினோத் முதல் பாதியில் மிகவும் விறுவிறுப்பான ரைட்டிங் கொடுத்திருப்பார், ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு முக்கியமான ப்ளாஷ்பேக் போர்ஷனில் இன்று தேவையான மெசேஜை அவர் சொல்ல வந்தாலும், 2ம் பாதியில் கொஞ்சம் லேக்கிங் இருக்கிறது.
படம் கொஞ்சம் மெதுவாகதான் நகர்கிறது. அஜித் கதாபாத்திரம் எழுத்தப்பட்ட அளவிற்கு மற்ற கதாபாத்திரங்களுக்கும் அழுத்தம் கொடுத்திருக்கலாம், குறிப்பாக சமுத்திரக்கனி, மஞ்சு வாரியர் கேரக்டர்களுக்கு நிறைய ஸ்கோப் இருந்தும் சரியாக கேரக்டர் எழுதப்படவில்லை.
மொத்தமாக இந்த படம் எப்படி இருக்கு என்று கேட்டால் இந்த பொங்கல் விடுமுறைக்கு குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படமாகவே வெளியாகி உள்ளது இந்த துணிவு. என்ன கொஞ்சம் துப்பாக்கி சத்தம் அதிகம் இருக்கும்.
இணைய தலைமுறை ரேட்டிங்: 3/5