கடவுள் நம்பிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் பலவித கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களின் இயக்குனர் எச்.வினோத் நேர்காணல் ஒன்றில் அளித்துள்ள விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் இதுவரை 6 முறை மாலை அணிந்து சபரிமலை சென்றிருக்கிறேன். கடவுள் இருக்காரா..? இல்லையா..? என்ற தலைப்பிற்குள் நான் போக விரும்பவில்லை. எனக்கு கடவுள் தேவையா இல்லையா எனக் கேட்டால். எனக்கு கடவுள் நம்பிக்கை தேவைப்படுகிறது. ஏன் என்றால், கடவுள் இல்லாமல் வாழ்வதற்கு மிகப்பெரிய தெளிவும், தைரியமும் தேவைப்படுகிறது.
அது என்னிடம் இல்லை. என்னுடைய சி்க்கல்கள், பிரச்சனைகள் இதிலிருந்து மீள எனக்கு கடவுள் தேவைப்படுகிறார். நான் கடவுளை நம்புவதால், மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. கடவுளை வைத்து வியாபாரம் செய்யவோ, அவரை வைத்து அதிகாரம் செய்யவோ, மற்றவர்களை வெறுக்கவோ, பிரிக்கவோ முயலும்போதுதான் கடவுள் நம்பிக்கை பிரச்சனையாக தெரிகிறது. கடவுள் என்பவர், எனக்கு கணிதத்தில் வரும் X போல, அந்த X-ஐ வைத்து அந்த கணிதத்தை முடிப்போம்.
அது போலதான் எனக்கு கடவுள் என அழகான விளக்கத்தை அளித்தார். அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.