எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிரேம் உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அஜித் குமார் டிரையிலரில் செம மாஸான லுக்கில் இருக்கிறார். வங்கி கொள்ளையை பற்றிய படம் இது. அஜித் துப்பாக்கி முனையில் வங்கிக்குள் நுழைந்து பணத்தை கொள்ளையடிக்கிறார். அஜித்தின் லுக் மற்றும் அவர் பேசும் வசனங்கள் தெறிக்கிறது. சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அஜித் கையில் துப்பாக்கியுடன் நடனம் ஆடும் காட்சி தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று தெரிகிறது. பிண்ணனி இசை கிராபிக்ஸ் என டிரையிலரில் அனைத்தும் ரசிக்கும்படியே உள்ளது. இந்த டிரையிலர் குறித்து உங்களது கருத்தை கமெண்ட் பண்ணுங்க.





நேற்று இந்த படத்தின் கேரக்டர் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. அதில் அஜித் குமாரின் கேரக்டர் பெயர் அறிவிக்கப்படவில்லை.மேலும் இந்த படத்தில் நடிகர் வீரா சர்பட்டா பரம்பரை மூலம் பிரபலமான ,ஜி.எம்.சுந்தர், ஜான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த பொங்கலுக்கு விஜய் நடித்து வெளியாக உள்ள வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்திற்காக அவர்களது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரது படங்களும் மோத உள்ளது குறிப்பிடதக்கது. விஜய்யின் வாரிசு டிரைலர் ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.