முதல் முறை இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் கவனத்திற்கு

Reading Time: 2 minutes

பாதுகாப்பான வாழ்க்கைக்கு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியமாகும். இந்த தொகுப்பில் முதல் முறை லைஃப் இன்சூரன்ஸ் தேர்வு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

லைஃப் இன்சூரன்ஸ் யாருக்கு அவசியம்?

லைஃப் இன்சூரன்ஸ் வாங்குவதற்கு முன்பு அது நமக்கு அவசியம்தானா என்று தெரிந்து கொள்வது அவசியமாகிறது. எல்லாரும் வாங்குகிறார்கள் நாமும் வாங்கலாம் என்று சேல்ஸ் ஏஜண்ட் சொல்வதை கேட்டு வாங்காமல், நமக்கு எது தேவை என்று பார்த்து வாங்க வேண்டும். குடும்பத்தில் உங்களுடன் பெற்றோர்கள் அல்லது மனைவி, குழந்தைகள் என இருந்தார்கள் என்றால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக வீட்டில் யார் சம்பாதிக்கிறார்களோ, யார் வருமானத்தை நம்பி குடும்பம் இருக்கிறதோ அவர்கள் மட்டும் இன்சூரன்ஸ் எடுத்தால் சரியாக இருக்கும். அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் கூட அந்த குடும்பத்துக்கு அவர் மீதுள்ள இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும். அதனால் சம்பாதிக்க தொடங்கும்போதே இன்சூரன்ஸ் எடுக்கலாம்.

லைஃப் இன்சூரன்ஸ் வகைகள்

லைஃப் இன்சூரன்ஸ் Whole, Term, ULIP, ENDOMENT என்று வகைகள் உள்ளது. நிறைய பேர் செய்யும் தவறுலைஃப் இன்சூரன்ஸை சேமிப்பாக பார்ப்பது. இன்சூரன்ஸ் சேவிங் திட்டம் கிடையாது அந்த மனதை மாற்றுங்கள் அதை செக்யூரிட்டிக்காக பாருங்கள். அதனால் நீங்கள் செக்யூரிட்டிக்காக டெர்ம் இன்சூரன்ஸை தேர்வு செய்து கொள்ளுங்கள். இது உங்கள் டெர்ம் முடிந்த பின்னும் பெரிய அளவில் ரிட்ட்ர்னை தராவிட்டாலும் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும். உங்களுக்கு ஏதாவது நிகழ்ந்தாலும் உங்கள் குடும்பத்துக்கு பெரிய தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் தேர்வு செய்யும் போது Disability and critical illnesss coverage எடுத்து கொள்வது நல்லது. இது Add ons ஆக தேர்வு செய்வதால் இடையில் உங்களுக்கு விபத்தோ அல்லது கேன்சர் போன்ற நோய் ஏற்பட்டால் உங்களது மாத வருமானம் பாதிக்கப்பட்டால் இன்சூரன்ஸ் தொகை உங்களுக்கு கிடைக்கும்.

எவ்வளவு பணம் இன்சூரன்ஸ்க்கு கட்டலாம்?

டெர்ம் லைஃப் பிளானை செலக்ட் பண்ண நினைக்கும் பலருக்கும் வரும் டவுட் எவ்வளவு கட்டலாம், நீங்கள் 25 வயதில் தொடங்கலாம் என்று திட்டமிட்டால் உதாரணத்திற்கு 60 வயது வரை இன்சூரன்ஸ் தொகை கட்ட முடிவு செய்தீர்கள் என்றால் உங்களது பிரிமியம் தொகை மாறாது. உங்கள் ஆண்டு வருமானத்தை 20 ஆல் பெருக்குங்கள். உதாரணத்திற்கு 3 லட்சம் வருட வருமானம் என்றால் 3*20 = 60 லட்சம். இதைதான் நீங்கள் இன்சூரன்ஸ் பணமாக தேர்வு செய்வீர்கள். இதற்கு மாதம் ரூ.1000 நீங்கள் கட்டுவதாக கணக்கெடுத்தால், வருடத்திற்கு 12,000 ரூபாய். 40 வருடத்திற்கு ரூ.4,18,000. இடையில் உங்களுக்கு ஏதேனும் நடந்தால் இந்த பணம் குடும்பத்துக்கு உதவியாக இருக்கும்.

இன்சூரன்ஸ் பாலிசி வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

எந்த இன்சூரன்ஸ் வாங்கும் முன்னும் அந்த கம்பெனியின் இந்த இரண்டு விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது.

  1. Claim Settlement Ratio
  2. Amount Settlement Ratio

இந்த இரண்டின் Ratio-வும் அதிகமாக உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கிளைம் செட்டில்மண்ட் 100க்கு 96 சதவீதம் இருக்கும் அப்படி என்றால் அவர்கள் 96 சதவீதம் பேருக்கு கிளைம் செட்டில் செய்திருப்பார்கள் அதே நேரத்தில் Amount செட்டில்மண்ட் குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள் 96 சதவீதம் கிளைமில் எத்தனை சதவீதம் பேருக்கு Amount செட்டில்மண்ட் செய்துள்ளார்கள் என்று.

கஸ்டமாராகிய நீங்களும் இன்சூரன்ஸ் பாலிசி குறித்த படிவத்தை நிரப்பும் போது, உங்களுக்கு இருக்கும் அல்லது இருந்த நோய்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்ப வேண்டும். ஏனென்றால் சின்ன சின்ன தவறுகளால் உங்கள் தொகை வீணாக போகலாம். அதனால் சரியான தகவல்களை முன்பே நிரப்பிடுங்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d