A.R.ரஹ்மான் இசையமைக்கும் படங்கள்

Reading Time: 2 minutes

2023ம் ஆண்டு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்திய அளவில் வெளியாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

அயலான்

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள அயலான் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சையின்ஸ் பிக்சனான இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ஏலியன் படம் முழுவதும் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.


Aadujeevitham

இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளிவர உள்ள மலையாள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’. நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பத்து தல

நீண்ட நாட்களாக STR ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் ’பத்து தல’.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர்.

மாமன்னன்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த வருடம் வெளியாக உள்ளது.

KH 234

இயக்குநர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைய உள்ள ‘KH234′ கமலின் 234வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.



Pippa

இசான், மிருனாள் தாகூர் நடிப்பில் ஹிந்தி வார் டிராமாவாக இந்த வருடம் வெளியாக உள்ள ‘பிப்பா’ படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.


காந்தி டாக்ஸ்

Kishor Pandurang Belekar இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசரை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Maidaan

அஜய் தேவகன் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் பீரியாடிக் டிராமாவாக வெளிவர உள்ள “மைதான்” திரைப்படத்திற்கு ஏ. ஆர் .ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படமும் இந்த ஆண்டு வெளிவர உள்ளது.


பொன்னியின் செல்வன் – பாகம் 2

மணிரத்னம் இயக்கத்துல் கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் பலர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: