உடல் எடையை குறைக்க வேண் டும் என்ற ஆசை பருமனாக உள்ள அனைவருக்கும் இருக்கும். நான் உங்கள் பிட்னஸ் கோச் Biglee முரளி , இந்த பதிவில் உடல் எடையை குறைக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சிம்பிளான 8 வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

1. சாப்பாட்டின் அளவை உடனே குறைக்காதீர்கள்
நிறைய பேர் சாப்பாட்டின் அளவை குறைத்தால் தங்களது பருமன் குறைந்து விடும் என்று நினைக்கின்றனர். அதனால் ஒரு சிலர் வெயிட் லாஸ் செய்வதற்காக மொத்தமாக சரியாக சாப்பிடாமல் சில வாரங்களில் தனது வெயிட் குறைந்து விட்டது என்று நம்புகின்றனர். ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல மேலும் உங்கள் உடம்பிற்கு தேவையான கலோரியின் அளவை எடுக்காமல் இருப்பதால் உங்கள் எடை சில வாரங்களுக்கு பிறகு குறையாமல் நின்றுவிடும். படிப்படியாக உங்களது சாப்பாட்டின் அளவை குறைப்பது உங்களது வெயிட் குறைக்கவும் உதவும் மேலும் உங்களது எனர்ஜியும் சரியாக இருக்கும்.
2. அதிகமான அளவு தண்ணீர் பருகுங்கள்
நமது உடலுக்கு தேவையான அளவிற்கு நீர் குடிக்காவிடில் நிறைய பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் தேவையான அளவு தண்ணீர் பருகுவது உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல் உடல் நல்லத்திற்கும் மிகவும் நல்லது.
பிட்னஸ் குறித்து மேலும் அதிக தகவல்களை பெற BigleeTamil யூட்யூப் பக்கத்தை பாலோ செய்யுங்கள்.
3. புரோட்டின் கொண்ட உணவுகளை சாப்பிடுவது
புரோட்டின் உணவுகளை அதிகமாக எடுப்பது நமது உடல் உள்ளுறுப்புகளுக்கும் நல்லது. மேலும் புரோட்டின் உணவுகளை செரிமானம் செய்ய 30% கலோரிகள் பயன்படுகிறது. இதனால் புரோட்டின் உணவுகளை எடுப்பது இரு வழிகளில் நனது உடலுக்கு நன்மையாக அமைகிறது.
4. நெகட்டிவ் கலோரி டயட்
ப்ரொக்கோலி, தர்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் காலிஃப்ளவர் போன்ற உணவுகளை உட் கொள்வதை நெகட்டிவ் கலோரி டயட் எட்போம். இது போன்ற நார் சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுப்பதால் நமது உடம்பில் அதிக கலோரிகள் குறையும்.
5. குறைந்த அளவில் உணவை அதிக முறை எடுக்கலாம்
கார்போ ஹைட்ரேட் அளவில் உடலில் குறைக்க வேண்டும் என்று உணவை மொத்தமாக குறைக்காமல். ஒரு நாளைக்கு 3 முறை அதிகமாக சாப்பிடுவதை விட 5-6 முறை குறைந்த அளவில் எடுத்து கொள்ளலா. ஒவ்வொரு முறையும் புரோட்டி, கார்போ ஹைட்ரேட் மற்றும் ஃபைபர் சத்து கொண்ட உணவை சேர்த்து கொள்ளலாம்.

6. சர்கரை பொருட்களை தவிருங்கள்
சர்கரை பொருட்களை உங்களது உணவு பொருட்களில் இருந்து தவிர்ப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.
7. Omega 3 அமிலம் கொண்ட உணவுகள் (Essential Fatty acid)
மீன் போன்ற உணவுகளில் Omega 3 fatty acid உள்ளது. இயற்கை உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலுக்கு Omega 3 அமிலம் கிடைக்கும். இது நமது உடல் எடையை குறைக்க உதவுவதோடு. இதய பாதுகாப்பிற்கும் நல்லது.
8. Weight Training
இதுவரை சொன்ன 7 டிப்ஸிலும் எந்த ஒரு உடற்பயிற்சியும் தேவையில்லை. ஆனால் இந்த தொகுப்பின் கடைசி மற்றும் முக்கியமான ஸ்டெப் weight training. வெயிட் டிரெய்னிங் செய்வதால் உங்களது மெடோபாலிசம் அதிகரிப்பதோடு நமது உடலும் அழகான உடல் அமைப்பை சீக்கிரமாக பெற முடியும்.