ஜிம்மில் புதிதாக சேரும்போது என்ன செய்யலாம்? என்ன தவிர்க்கலாம்? என்பது குறித்து நிறைய பேருக்கு தெரிவதில்லை. நான் உங்கள் பிட்னஸ் கோச் Biglee முரளி , இந்த பதிவில் ஜிம்மில் புதிதாக சேருபவர்கள் செய்யும் 3 தவறுகள் குறித்து பார்க்கலாம்.

1. உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனையை கேட்டு தொடங்கலாம்
ஜிம்மில் புதிதாக சேருபவர்கள் அவர்களுக்கு பிடித்த ஸ்டார் அல்லது நண்பர்கள் சொல்வதை கேட்டு உடற்பயிற்சியை தொடங்குகின்றனர். அவர்களது ஒர்க் அவுட்டை பாலோ செய்வதால் சில பிரச்னைகள் ஏற்படலாம். ஒவ்வொருவரின் உடல் அமைப்பும் வித்தியாசமானது. அதனால் பிட்னஸ் கோச், அல்லது பிட்னஸ் குறித்து நன்றாக தெரிந்தவர்களிடம் அறிவுறை கேட்டு உங்களுக்கு ஏற்ற Workout routines குறித்து தெரிந்து கொண்டு பின்னர் தொடங்கலாம்.
2. ஒரே நாளில் அதிகமான பயிற்சிகளை செய்யாதீர்கள்
ஜிம்மில் புதிதாக சேர்பவர்கள் செய்யும் முக்கிய தவறு இதுதான், ஒரே நாளில் அதிகமான ஒர்க் அவுட் செய்துவிட்டு பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யாமல் விட்டு விடுகின்றனர். உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க படிப்படியாக ஒர்க் அவுட் செய்ய வேண்டும். ஒரே நேரத்தை தினமும் பின்பற்றி ஜிம்மிற்கு செல்ல வேண்டும். இதனால் உங்களுக்கு இது தினசரி பழக்கமாகவும் மாறலாம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் உத்வேகத்தையும் கொடுக்கும்.
3. படிப்படியாக உணவில் டயட்டை கொண்டு வரலாம்
உடற்பயிற்சி செய்ய தொடங்கிய உடனே கீட்டோ, பாலியோ, லோ கார்ப் டயட்டுகளை தொடர்வது சாத்தியமில்லாத ஒன்று. பின்னர் எப்படி தொடங்கலாம் என்று கேட்டால், ஜங் ஃபுட்களை தவிர்க்கலாம், ஒவ்வொரு வேளை சாப்பிடும்போது பழங்கள், காய்கறிகளை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் உங்களது உணவில் புரோட்டின் அதிகமாக எடுக்க தொடங்கலாம். அதன் பிறகு உங்கள் உணவில் புரோட்டின், கார்போ ஹைட்ரேட் என்று அளவு வைத்து சாப்பிட தொடங்கலாம்.
இதுபோல படிப்படியாக உங்கள் ஒர்க் அவுட்டை தேர்ந்தெடுப்பதால் உங்களால் தொடர்ந்து உடற்பயிற்சி பயணத்தை எந்த சிரமமும் இன்றி தொடர முடியும்.