2023ம் ஆண்டு நிகழவுள்ள மிகவும் முக்கியமான அற்புதமான நிகழ்வு சனிப்பெயர்ச்சி. நிறைய பேர் இதனை எதிர்பார்த்தும் பலர் இதை கண்டு பயப்படவும் செய்வர்.
இந்த சனிப்பெயர்ச்சி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுகிறது. சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். இந்த சனிப்பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு எந்த மாதிரியான பலன்களை கொடுக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்கு சனி பகவான் 11வது இடத்திற்கு வருகிறார். அங்கிருந்து 3வது பார்வையாக மேஷ ராசியை பார்க்கிறார். அதனால் சுறுசுறுப்பு குறையும், அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் எண்ணம் தோன்ற வாய்ப்பு உள்ளது. சனி பகவான் திடீர் பணவரவை கொடுப்பார். இரும்பு சம்பந்தமான தொழில் செய்போருக்கு அமோகமாக வரவு ஏற்படும். எக்ஸ்போர்ட், இம்போர்ட் பிசினஸ் செய்பவர்கள் பணவரவை காண்பீர்கள். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும் ஆனால் இந்த வருடம் திருப்தி கொஞ்சம் கம்மியாக உள்ளதாக உணர்வீர்கள்.
ரிஷபம்

ரிஷப ராசிக்கு 10வது இடத்தில் சனி பகவான் பெயர்ச்சி செய்கிறார். 10வது இடம் தொழில் ஸ்னாதிபதி. அட்வகேட், இரும்பு, எண்ணெய், தின ஊழியர்கள் போன்றவர்களுக்கு அமோக பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜீன் மாதம் முதல் மிகவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தெரியாத தொழிலில் யாரோ சொன்னார்கள் என்று பணத்தை போடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மிதுனம்

மிதுன ராசிக்கு 9 வது இடத்தில் சனி பெயர்ச்சி வருகிறது. தந்தை உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை பட்ட கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும், நினைத்த காரியம் நடக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தடங்கலாக இருந்த அனைத்தும் சரியாக நடக்கும். குடும்ப பிரச்னைகள் நீங்கி மனதில் நிம்மதி கிடைக்கும். பெண்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேண்டுதல்கள் ஏதேனும் இருந்தால் நிறைவேற்றுவது நல்லது. சகல நன்மைகளும் வந்து சேரும்.
கடகம்

கடக ராசிக்கு இந்த காலக்கட்டத்தில் அஷ்டமத்து சனி வர உள்ளது. சிறிது கவனமாக இருக்கவும். தொழில் தொடங்கும் போது சிறிது யோசித்து முடிவெடுங்கள். அநாவசிய செலவு செய்யாமல் இருங்கள். வீட்டில் உள்ள தாய், மனைவியிடம் பணத்தை கொடுத்து தேவையானதை மட்டும் வாங்கி செலவு செய்யுங்கள். தெய்வீக வழிபாடு இந்த வருடத்தில் மிகவும் முக்கியம். நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க அதுவே உதவியாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த வருடம் 7-வது இடத்தில் சனி பகவான் வருகிறார். ஒரு வித பயம் குழப்பம் தோன்றலாம். ஆனால் எந்த பிரச்னை வந்தாலும் யாரோ ஒருவர் உதவுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் தடங்கலான சுப காரியங்கள் நடக்கும். நல்ல முன்னேற்றங்கள் உண்டு. நீங்கள் மனதில் நினைத்த அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். பயத்தை போக்க தெய்வீக வழிபாடு செய்தால் போதும் அனைத்து பயமும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு 6 வது இடத்தில் சனி பகவான் வருகிறார். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மார்ச் முதல் ஜீன் மாததிற்குள் தேவையான நன்மைகளை செய்து கொள்ளுங்கள். வாகனங்களில் கவனம் தேவை. வேலை வாய்ப்பு கிடைக்கும். கை, கால் சம்பந்தபட்ட பிரச்னைகள் இருந்தால் மருத்துவரை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் நல்லது. தெய்வ வழிபாடு தன்னம்பிக்கையை கொடுக்கும்.
துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். வேலையில் இடமாற்றம், குழந்தைகள் நலனில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளை வெளியே கூட்டி செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது. மன நிம்மதி ஏற்படும், தொழிலில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்

விருச்சக ராசிகாரர்களுக்கு அர்ந்தாஷ்டம சனி வருவதால் கவனமாக முடிவு எடுப்பது நல்லது. வீடு வாங்குவது, விற்பதில் கவனம் தேவை. பண விவகாரங்களில் யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. சேமிப்பை அதிக படுத்துங்கள். காரியத்தை சாதிக்க சிலர் உங்களை ஏமாற்ற வாய்ப்பு உண்டு. பூர்விக சொத்து விவகாரங்கள் முடிவுக்கு வரும். நல்லதே நடக்கும் கவலை வேண்டாம்.
தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு 3வது இடத்தில் சனி வருகிறார். அலைச்சல்கள் இருக்கும் ஆனால் காரிய விருக்தி ஏற்படும் அமோகமான நிலை உண்டு. ஏழரை சனி போய்விட்டதே உங்களுக்கு மிகப்பெரிய ரிலீஃப். திருமணம், படிப்பு, குடும்ப நலன் அனைத்திலும் நன்மைகள் ஏற்படும். வெளியூர் போகும் போது பொருட்களை எடுத்து செல்வதில் கவனம் தேவை.
மகரம்

மகர ராசிகாரர்களுக்கு இப்போது குடும்ப சனி வருகிறது. வர வேண்டிய பணம் வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நல்லது நடக்கும் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். ரகசியங்களை அனைவரிடமும் சொல்லாதீர்கள் பேசும் போது கவனம் தேவை. ஷேர் மார்க்கெட், IPO போன்ற பங்கு சந்தை விஷயங்களில் கவனமாக இருங்கள்.
கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு 12 வது இடத்திலிருந்து ஜென்மத்திற்கு வந்துள்ளார். மதிப்பு குறைந்ததாக நீங்களே உணர்வீர்கள். ஆனால் அப்படி நினைக்காதீர்கள் உங்களுக்கு அனைத்திலும் வெற்றி உண்டு. குழந்தைகள் கல்வி, தொழில் வளர்ச்சி என அனைத்திலும் நன்மைகள் உண்டாகும் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.
மீனம்

மீன ராசிக்கு ஏழரை சனி வந்துள்ளது. எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் அகல கால் வைக்காமல் இருங்கள். பண விரயம், மருத்து செலவு ஏற்படலாம். உடல் நலனில் கவனம் தேவை. ஏழரை சனியின் தாக்கம் சிறிதளவு இருக்கும் சனிக்கிழமை சனீஸ்வர பகவானை வழிபட நல்லது நடக்க நிறைய வாய்ப்பு உள்ளது.
12 ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை பார்த்தோம். சிலருக்கு நன்மை சிலருக்கு சிறிய அளவில் குழப்பங்களை இந்த சனி பெயர்ச்சி கொடுக்கலாம். இந்த காலகட்டத்தில் சுத்தமாக இருங்கள், கடவுள் வழிபாடு செய்யுங்கள். இல்லாதோருக்கு தானம் செய்வது மிகவும் சிறந்தது. சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான் கோயிலில் விளக்குகள் ஏற்றுவது நல்ல பலனை தரும்.
One thought on “சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் (2023 – 2026)”