2023ம் ஆண்டு துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசி நேயர்களுக்கு எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
துலாம் ராசி

உங்க ராசிக்கு 7-ம் வீடான மேஷ ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பல நல்ல வாய்ப்புகள் உண்டாக இருக்கிறது. இதுவரை வெளிவராமல் இருந்த உங்க தனித்திறமைகள் தற்போது வெளிவரும். ஆரோக்கியம் மேம்படும். அழகு, இளமைக் கூடும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும்.
22.4.2023 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீடான மீனத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் எப்போதும் மனதில் ஒரு கவலை இருக்கும். வேலை தொடர்பான டென்ஷன் வந்து வந்து போகும். சிக்கனமா இருக்கனும்னு நினைத்தாலும்.. அதுக்கு வாய்ப்பில்ல ராஜா.
எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்து முடிக்க வேண்டியிருக்கும்.
23.4.2023 முதல் குருபகவான் 7-ம் வீடான மேஷத்தில் அமர்வது பல நல்ல பலன்களைத் தரும். வாழ்வில் அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாகக் குறையும். நல்ல திருப்பங்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பழக்கங்களை விட்டுவிடுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள் இது துலாராசிகாரங்க மட்டும் இல்ல எல்லாரும் ஃபாலோ பண்ணா நல்லா இருக்கும்.
வியாபாரம் செய்றவங்களுக்கு வரவு கணிசமாக உயரும். நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், பதிப்பகம், வாகன உதிரி பாகங்களால் லாபம் கூடும். நன்கு அறிமுகமானவரை பங்குதாரர்களாக சேர்க்கப் பாருங்கள்.
வேலை செய்றவங்களுக்கு சின்னச் சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரியிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். சக ஊழியர்களிடம் நீக்குபோக்காக நடந்துகொள்ளுங்கள். இடமாற்றங்கள் வரும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கி கைக்கு வரும்.
விருச்சிக ராசி

இந்த ஆண்டு பிறக்கும்போது புதன் சாதகமான நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுமதி அப்ரூவல் ஆகியன உடனே கிடைக்கும். வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறி சாதகமான போக்கு காணப்படும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்வதோடு செலவுகளும் அதிகரிக்க ஆரம்பிக்கும் என்றாலும், எதிர்பாராத பணவரவும் வந்து கைகொடுக்கும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். அரசு காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும்.
ஆண்டின் தொடக்கம் முதல் 13.4.2022 வரை குரு உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான கும்ப ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பணப்பற்றாக்குறை அகலும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வருமானத்தை உயர்த்தப் புது வழி கிடைக்கும். மகப்பேறு வேண்டிக்காத்திருக்கும் அன்பர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். அவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். குடும்பத்தில் மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்கியம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டினரால் நல்ல வாய்ப்புகள் உருவாகும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிக்கும் வல்லமை பிறக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்னைகளுக்கு யதார்த்தமான தீர்வு காண்பீர்கள்.
தொழில் செய்பவர்கள் புது முதலீடுகளில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பிக் கைப்பொருளை இழக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். தொல்லை தந்த வேலையாட்களை நீக்கிவிட்டு அனுபவமிக்க புதிய வேலையாட்களைப் பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள்.
வேலை செய்பவர்கள் அலுவலகச் சூழல் இனி நிம்மதி தருவதாக இருக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏப்ரல் மாதத்தில் பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். மொத்தத்தில் இந்த வருடத்தின் இறுதிப் பகுதி சற்றே இடையூறாக இருந்தாலும் மையப்பகுதி மத்திமமாகவும், முற்பகுதி முன்னேற்றுவதாகவும் அமையும்.
தனுசு ராசி

உங்க ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வாழ்வில் வசதிகள் உயரும். புதிய திட்டங்கள் நிறைவேறும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அநாவசிய செலவுகளைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவீர்கள்.
இந்த ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி வரை குருபகவான் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்து பலன் தருகிறார். எனவே திருப்பதால் இனந்தெரியாத கவலைகள் வந்துப் போகும். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பேசுவார்கள். இறைவழிபாட்டில் மனம் செல்லும். சித்தர்களின் ஆசி கிடைக்கும். நண்பர்களின் அலட்சிய மனோபாவம் வருத்தம் தரும். வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
பயணத்தின் போது கவனம் தேவை. விலகிச் சென்ற சொந்த-பந்தங்கள் மனம்மாறி வலிய பேசுவார்கள். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தினரால் சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
தொழில் செய்றவங்களுக்கு இந்த வருஷம் அமோகமாக இருக்கும். பணியாளர்கள் சிறப்பாகப் பணிசெய்வார்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்றுமதி-இறக்குமதி, காய்கறி, ஹாட்வேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
வேலை செய்றவங்களுக்கு, உங்கள் ஆலோசனை அலுவலகத்தில் பாராட்டப்படும். அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் உங்களை வியந்து பார்ப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். வேறு நல்ல நிறுவனத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு பிரச்சனைகளிலிருந்து விடுவித்து மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் தருவதாக அமையும்.