2023ம் ஆண்டு புதுவருட பலன்கள் (மேஷம், ரிஷபம், மிதுனம்)

Reading Time: 3 minutes

2023ம் ஆண்டு மேஷம் ,ரிஷபம் மற்றும் மிதுன ராசி நேயர்களுக்கு எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

மேஷம் ராசி

மேஷ ராசி காரர்களே இந்த வருஷம் உங்களுக்கு அமோகமான வருஷம். உங்க ராசிக்கு 10-ம் வீட்டில் சுக்கிரன் இருக்கறதால, இந்த வருஷம் உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் காத்துக்கிட்டு இருக்கு. இதுவரை நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் கூடிவரும். புது வாகனம் வாங்கும் யோகம் வாய்க்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரின் சுயரூபம் தெரியவரும். அதற்கேற்ப அவர்களின் தொடர்புகளைத் துண்டிப்பீர்கள். இருந்தாலும், உங்க ராசியிலேயே இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பல சவால்களும் செலவுகளும் இருந்தபடி இருக்கும். உடம்ப பாத்துக்கோங்க, மனச சந்தோஷமா வச்சுகோங்க, இந்த வருஷத்த எஞ்சாய் பண்ணலாம்.

22.4.2023 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீடான மீனத்திலேயே இருக்கறதால செலவுகள் அதிகமாகும் பர்ச பத்தரமா பாத்துக்கோங்க. குடும்பத்தில் சுபச் செலவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அனைத்திலும் நிதானம் ரொம்ப முக்கியம்.
8.10.2023 வரை ராசிக்குள்ளே ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுபகவானால் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் உஷாரா இருந்துகோங்க..

வியாபாரத்துல லாபம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல்கள் விலகி சுமுகமான நிலை வரும். புதிய முதலீடுகளின் மூலம் சந்தையில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணியாளர்கள் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு தருவாங்க.

வேலை செய்ற இடத்துல, இருந்த சிக்கல்கள் விலகும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இந்த ஆண்டு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.


மொத்தத்தில் வருஷத்தோட பர்ஸ்ட் ஆப் சேலஞ்சிங்கா இருந்தாலும், செகண்ட் ஆப் இண்ட்ரஸ்டிங்கா போகும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களே… தவறு செய்தவர்கள் யாரா இருந்தாலும் தயங்காமல் தட்டிக்கேட்கும் உங்களுக்கு 2023 மிகவும் புத்துணர்ச்சி தரும் வருஷமாகவே இருக்க போது. மனதில் இருந்த விரக்தி, கோபம் ஆகியன விலகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பூசல்கள் விலகும். நீண்ட நாள்களாகக் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அது கிடைக்கும் இதை விட வேற என்ன வேணும் சொல்லுங்க.

கடன்களைக் கட்டி முடிச்சுடுவீங்க, தடைப்பட்ட சுபகாரியங்கள் நல்லதா நடக்கும். வீடு கட்டும்பணியைத் தொடங்குவீர்கள். இந்த ஆண்டு குழந்தைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். அவர்கள் உங்கள் விருப்பம் போல நடந்துகொள்வார்கள்.

22.4.2023 வரை குருபகவான் 11-ம் வீட்டிலே வலுவாக அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரித்துக் காணப்படும்.
சகோதர உறவுகள் சாதகமாக இருப்பாங்க.. எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.

அறிமுகம் இல்லாதவர்களோடு புதிய நட்பை ஏற்படுத்துறத்துக்கு முன்னாடி ஒரு தடவைக்கு ரெண்டு தடவ நல்லா யோசிச்சுகோங்க ரொம்ப நல்லது. யாரையும் நம்பியும் எதையும் ஒப்படைக்காதீங்க.

வியாபாரம் செய்றவங்களுக்கு வருஷம் முழுவதுமே அமோகமாக லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்தும் திட்டம் நல்ல பலனைத் தரும். ஏப்ரல் மாதத்திற்குள் பழைய பாக்கிகள் வசூலாகும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். ஹோட்டல் ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் கிடைக்கும்.

வேலை செய்றவங்களுக்கு ஆண்டின் தொடக்கத்திலேயே பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.பெண்டிங்கல் இருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் தேடிவரும். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து புதிய வேலை தேடிவரும்.

மிதுன ராசி

இந்த வருஷம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். பிளான் பண்ண காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த தலைகுனிவுதரும் பிரச்னைகள் நீங்கும். சகோதரர்கள் உங்களோடு ஒத்தாசையாக இருப்பார்கள். அவர்களோடு இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குருபகவான் ராசிக்கு 10 ம் வீட்டில் தொடர்வதால் பணிச்சுமை அதிகரித்து இருக்கும். பராமரிப்புச் செலவுகள் கூடும். தொடங்கும் செயல்களை ஒருமுறைக்கு இருமுறை மேற்கொள்ள வேண்டிவரும். யாரோடும் தேவையில்லாமல் பகைக்க வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளால் சின்னச் சின்ன நெருக்கடிகள் வந்து போகும்
23.4.2023 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ம் வீடான மேஷத்தில் அமர்வதால் அமர்வதால் பணவரவு திருப்தியாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத திடீர் பணவரவும் வாய்ப்புண்டு.
புதிய வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கு மேல் நல்ல வேலைக் கிடைக்கும்.

இந்த வருஷமும் சனிபகவான் அஷ்டம சனியாகவே தொடர்கிறார். எனவே அனைத்து விஷயங்களிலும் சிறு கவனம் தேவை. முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், வீண் பழி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். மனம் சஞ்சலமாக இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை வந்துக்கிட்டேதான் இருக்கும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

வியாபாரம் செய்றவங்களுக்கு கணிசமாக லாபம் கிடைக்கும். வேலையாட்களால் சின்னச் சின்னத் தொந்தரவுகள் இருக்கும், அதனால நீங்களே வேலைய முன்னெடுத்து செஞ்சிங்கனா வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பாக்கிகளும் வசூலாகும். ஆகஸ்டு, அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

வேலைக்கு போறவங்க ஏப்ரல் மாதம் வரை தேவையற்ற தொந்தரவுகள் இருக்கும். உங்கள் மீது வீண் பழி விழும். அனைத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். குருபகவான் 23.4.23 முதல் 10 ம் இடத்திலிருந்து விலகுவதால் அனைத்தும் நலமாகும். மேலதிகாரிகள் கனிவுடன் நடந்துகொள்வார்கள். சலுகைகளும் கிடைக்கும்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d