2023ம் ஆண்டு புதுவருட பலன்கள் (கடகம், சிம்மம், கன்னி)

Reading Time: 3 minutes

2023ம் ஆண்டு கடகம்,சிம்மம் மற்றும் கன்னி ராசி நேயர்களுக்கு எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கடகம் ராசி

இந்த வருஷம் உங்க உழைப்பு மேம்படும். கடினமாக உழைத்து சாதிப்பீர்கள். பணிரீதியிலான சவால்கள் மனப்போராட்டங்கள் ஓயும். உங்கள் பேச்சுத் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலைகளை முடிச்சுடுவீங்க,

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான தனுசில் வளுவா நிக்கறதால, அரசு காரியங்கள் உங்களுக்கு சாதகமாக வரும், ரொம்ப நாளா நடந்து கொண்டிருக்கிற கேஸ்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலைப்பளு ரொம்ப அதிகமாகும். சொந்த காரங்களுக்காக செலவு செய்கிறது அதிகமாகும் வழக்கம்போல அதனால சில விமர்சனங்கள் உங்க மேல வரும்.

22.4.2023வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான மீனத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். சின்னச் சின்னக் கடன்களை அடைப்பீர்கள்.
சனிபகவான் ஏழாம் வீட்டில் கண்டக சனியாகத் தொடர்கிறார். இதனால குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வந்துபோகும். உடல் நலத்திலும் அக்கறை காட்டுவது நல்லது.

8.10.2023 வரை கேது உங்கள் ராசிக்கு நாலாம் வீடான துலாமில் சஞ்சாரம் செய்கிறார். ராகு பகவான் 10-ம் வீடான மேஷத்தில் இருக்கிறார். இதனால் தேவையற்ற டென்ஷன் அலைச்சல் இருந்த வண்ணம் இருக்கும். குடும்பத்தினரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டி வரும்.

வியாபாரம் செய்றவங்க வாடிக்கையாளர்களின் தேவையை தெரிந்து செயல்படுவது நல்லது. புதிய பணியாளர்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவு படுத்த வாய்ப்பு தேடிவரும். புதிதாக முதலீடுகளை நன்கு ஆலோசித்துச் செய்யலாம். ஜனவரி, மே, ஜூன் மாதங்களில் வியாபாரம் சூடு பிடிக்கும்.

வேலை செய்றவங்க சுமுகமான நிலை உண்டாகும். அதிகாரிகள் இதுவரை உங்களிடம் காட்டிய கடுகடுப்பைக் குறைத்துக் கொள்வார்கள். சம்பள உயர்வு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். கிடைக்கும் பணியில் உங்களை நிரூபித்துக் காட்டுவதன் மூலம் பல சலுகைகள் கிடைக்கும். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள் இருந்த வண்ணம் இருக்கும்.

சிம்மம் ராசி

இந்த வருஷம் சீரான பணவரவு இருக்கும், ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிகப் பணவரவுக்கும் வாய்ப்புண்டு.

எதிரிகள் விலகி ஓடுவார்கள் கடன் பிரச்சனைகளை பிளான் பண்ணி முடிச்சுடுவீங்க, ஆரோக்கியத்தில் இருந்த பின்னடைவு நீங்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும், புது வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது ரொம்ப அதிகமாகும். அதனால வர்ற செல்ல நீங்க தான் பாத்துக்கணும்.

ராசிக்கு ராசிக்கு 5-ஆம் வீடான தனுசுவில் புதன் சஞ்சாரம் செய்யும்போது இந்த வருஷம் பிறக்குது. அதனால நல்ல பலன்கள் கிடைக்கும். விஐபிக்களின் நட்பு அதிகமாகும் மனசுக்கு பிடிச்ச எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்குவீங்க. 

வருஷம் தொடங்கும்போது சனி பகவான் 6ஆம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கிறார். இதனால பிரச்சனைகளை சமாளிக்கும் வலிமை கூடும். முதலீடுகள் லாபம் தரும். பிரபலங்கள் நிறைய பேர் உதவி செய்வாங்க, பிரச்சினைகளை சீக்கிரமா முடிச்சிடலாம். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

 வியாபாரம் செய்பவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மே மாதத்தில் வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். ஜூன், ஜூலை, நவம்பர், மாதங்கள் எதிர்பாராத திடீர் திருப்பங்களும் அதிரடி லாபம் கிடைக்கும்.
 
ஒரு இடத்தில் வேலை செய்கிறவர்களுக்கு அவங்களுக்கான பதவி உயர்வு கிடைக்கும். கூட வேலை செய்றவங்களுக்கு சாதகமாக செயல்படுவீங்க. எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வேலைத் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு. மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பு இனி உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் அலுவலக ரகசியங்களை வெளியில் பேசாம இருக்கது ரொம்ப நல்லது. முக்கியமான டாக்குமென்ட் கவனமாக பார்த்துக்கீட்டிங்கனா வீண் பழியிலிருந்து தப்பிக்கலாம்.

கன்னி ராசி

உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 5-ம் வீடான மகரத்தில் சஞ்சாரம் செய்யும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே மனதில் அசாத்தியத் துணிச்சல் பிறக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை தேடி வரும். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பேச்சில் இனிமை பிறக்கும். குடும்பத்தில் இருந்து வருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மனைவி வழியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும்.

22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் பணம் தேவையான அளவுக்கு வரும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள்.

உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் இருந்த வண்ணம் இருக்கும். சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் வாய்க்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

சோர்ந்து இருந்த வியாபாரிகள் புத்துணர்ச்சி பெறுவார்கள். பழைய கடையைப் புதுப்பித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

வேலை பார்க்கும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வர வேண்டிய சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். புது அதிகாரி உங்களுக்கு உரிய மரியாதையைத் தருவார். பதவியுயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d