SONY Liv-ல் உள்ள சிறந்த 10 தமிழ் படங்கள்

Reading Time: 2 minutes

இந்த வார விடுமுறைக்கு சோனி லைவ் OTT-யில் உள்ள சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் (Best 10 Tamil Movies on Sony Liv) குறித்து பார்க்கலாம்.

10. சேத்துமான் (Sethuman)

IMDB Rating: 6.5/10

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், தமிழ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சேத்துமான்” . தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒரு முதியவர், அவரது பேரன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப்போராட்டம் இந்த படத்தின் கதைக்களம். அவர்களின் வாழ்வியல் குறித்த இந்த படம் சைவப்பிரியர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை.

9. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

IMDB Rating: 6.9/10

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் சோனி லைவில் நேரடியாக வெளியான திரைப்படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி ஆகியோரது வாழ்க்கையின் ஒரு பகுதியே இந்த கதை. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் வசந்த், மெதுவாக நகரும் கதைக்களம் சிறிய மைனஸ்.

8. சல்யூட் (Salute)

IMDB Rating: 7/10

இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம். துல்கர் சல்மான் முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் அண்ணன் தண்டனை வாங்கி கொடுத்த நிரபராதியை காப்பாற்ற களமிறங்கும் கதாநாயகன் கடைசியில் என்ன நடந்தது என்பதே மீதி கதை. இது மலையாள திரைப்படம் தமிழ் மொழியிலும் சோனி லைவில் உள்ளது.

7. அனல் மேலே பனித்துளி (Anal Mele Panithuli)

IMDB Rating: 07/10

வெற்றி மாறன் தயாரிப்பில் கேசர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்டிரியா நடித்து வெளியான திரைப்படம் “அனல் மேலே பனித்துளி”. ஒரு பெண்ணுடைய உடலை அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது தான் இந்த படத்தின் கதை.

6. நெஞ்சுக்கு நீதி (Nenjukku Needhi)

IMDB Rating: 7.3/10

இயக்குநர் அருண் ராஜா இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி” . இரண்டு தலித் சிறுமிகளின் மர்ம மரணத்துக்கான காரணத்தையும், காணாமல் போன ஒரு சிறுமியைத் தேடியும் புறப்படும் போலீஸ் பற்றிய கதை. இந்த திரைப்படம் இந்தியில் வெளியான Article 15-ன் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

5. அப்பன் (Appan)

IMDB Rating: 7.5/10

இயக்குநர் மஜு இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் “அப்பன்”. ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் கை, கால் விளங்காத ஒரு அப்பா. அவரால் குடும்பம் படும் கஷ்டம் என்ன என்பதுதான் கதை. சோனி லைவில் தமிழிலும் இந்த படம் உள்ளது.

4. கார்கி (Gargi)

IMDB Rating: 8.1/10

சாய் பல்லவி நாயகியாக நடித்து வெளியான திரைப்படம் “கார்கி”. ஒரு குற்றத்தில் சிக்கிக்கொள்ளும் தனது தந்தை நிரபராதி என்று நம்பும் மகள், சட்ட ரீதியாக தந்தையை விடுதலை செய்ய போராடுவதுதான் இந்த கதை. ஆனால் என்ன நடந்தது? யார் குற்றம் செய்தது என்பதுதான் மீதிக்கதை. சமுதாயத்திற்கு தேவையான கருத்தை மிகவும் ஸ்ட்ராங்காக சொன்ன திரைப்படம்.

3. மாநாடு (Maanadu)

IMDB Rating: 8.3/10

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் “மாநாடு”. இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய கலெக்‌ஷன் எடுத்தது. டைம் லூப்பில் சிக்கி கொள்ளும் கதாநாயகன் அதிலிருந்து எப்படி வெளி வருகிறான் என்பதே கதை. எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிப்பில் அசத்தியுள்ளார்.

2. நரை எழுதும் சுயசரிதம் (narai ezhudhum suyasaritham)

IMDB Rating: 8.4/10

ஜெய் பீம் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் “நரை எழுதும் சுயசரிதம்”. அவருடன் டெல்லி கனேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிபூர்வமான தருணங்களை கதைக்களமாக கொண்டுள்ள இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடதக்கது.

1. கடைசி விவசாயி (Kadaisi Vivasayi)

IMDB Rating: 8.8/10

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “கடைசி விவசாயி”, வீட்டுமனை வியாபாரிகளிடம் விளைநிலங்கள் மாட்டி பாலாகும் என்ற யதார்த்தத்தை மிகையின்றி கூறியுள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் அழுத்தமான கதையில் ‘மாயாண்டி’ கதாபாத்திரத்தில் நடித்த முதியவர் அருமையாக நடித்திருப்பார்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d