2022ம் ஆண்டின் சிறந்த 10 இந்திய நடிகர்களின் பட்டியலை IMDB நிறுவனம் வெளியிட்டது. நடிகர் தனுஷ் முதலிடத்தில் உள்ளதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
2022ம் ஆண்டு நிறைவு பெறப்போகிறது. இந்த ஆண்டின் சிறந்த 10 இந்திய நடிகர்களின் பட்டியலை IMDB தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் முதலிடத்தில் உள்ளார். இதனை அவரது ரசிகர்கள் டிவிட்டர் மற்றும் பல்வேறு சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

IMDB ”மிக பிரபலமான இந்திய நடிகர்ள் பட்டியல்” கீழே பார்க்கலாம்,
- தனுஷ்
- ஆலியா பட்
- ஐஸ்வர்யா ராய் பச்சன்
- ராம் சரண் தேஜா
- சமந்தா
- ஹ்ரிட்திக் ரோஷன்
- கியாரா அதவானி
- ஜூனியர் என்.டி.ஆர்
- அல்லு அர்ஜூன்
- யாஷ்

இந்த வருடம் தி கிரே மேன் மற்றும் நானே வருவேன் திரைப்படங்களில் தனுஷ் நடித்திருந்தார். தி கிரே மேன் ஆங்கில படத்தில் தனுஷ் 5 நிமிடம் நடித்திருந்தாலும் அவரது ஸ்கிரின் பிரசென்ஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. நானே வருவேன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்துடன் இணைந்து வெளியானதால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரிதியில் வெற்றிப்படமாகவே அமைந்தது.

ஆலியா பட் கங்குபாய் கத்யாவாடி மற்றும் பிரம்மாஸ்திரா படங்களில் நடித்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நந்தினியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றார்.
நடிகர் தனுஷை தவிர மற்ற தமிழ் நடிகர்கள் யாரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்த பட்டியல் இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.