12 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ”தீ தளபதி”

Reading Time: < 1 minutes

தமன் இசையில் STR பாடியுள்ள தீ தளபதி பாடல் யூட்யூபில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரெண்டாகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே எஞ்சியுள்ள நிலையில், வாரிசு படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த மாதம் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே என்கிற பாடல் வெளியிடப்பட்டது.

விஜய் மற்றும் மானசி இணைந்து பாடிய இப்பாடல் வெளியான உடனே வைரல் ஹிட் ஆனது. தமன் இசையில் வெளியான இப்பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து அப்படத்தின் அடுத்த பாடல் எப்போது ரிலீசாகும் என்கிற எதிர்பார்ப்பு எழத்தொடங்கியது. இதைடுத்து தான் வாரிசு படத்தின் இரண்டாவது பாடலாக தீ தளபதி என்கிற பாடல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தீ தளபதி பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடி இருக்கிறார். நடிகர் விஜய்யின் படத்துக்காக சிம்பு பாடுவது இதுவே முதன்முறை. இப்பாடல் வரிகளை விவேக் எழுதி உள்ளார். தமனின் இசையில் சிம்புவின் தெறிக்கும் குரலில் வெளியாகி இருக்கும் தீ தளபதி பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய் உள்பட வாரிசு படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவின் போது வாரிசு படத்தின் டிரைலரும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: