நமக்காகவும், நம்மை நம்பி உள்ளவர்களின் பாதுகாப்புக்காக ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களில் சேர்வது அவசியமாகிறது. 2021 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 514 மில்லியன் மக்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஸ்டாட்டிஸ்டாவின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நபர்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சுகாதார காப்பீட்டு திட்டங்களின் கீழ் காப்பீடு செய்துள்ளனர்,

இந்தியாவில், ஒட்டுமொத்த சுகாதார காப்பீட்டு விகிதம் 2018 நிதியாண்டில் கிட்டத்தட்ட 35 சதவீதமாக இருந்தது. இப்பொழுது அதன் விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகமான மக்கள் இப்போது சுகாதார காப்பீட்டின் முக்கியத்துவம் புரிந்து அதனை எடுத்து வருகின்றனர். அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் புதிய நோய்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சுகாதார காப்பீட்டை ஒவ்வொரு நபர்களும் எடுப்பது முக்கியமாகும். மெடிக்கல் எமர்ஜென்சி எந்த நிலையிலும் ஏற்படலாம், இது போன்ற காப்பிடுகள் அந்த நேரத்தில் நம்மை பாதுகாக்க உதவும்.
நீங்கள் 30 வயதிற்குள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்தால் என்ன நன்மைகள் என்பது குறித்து பார்க்கலாம்.
இளம் வயதில் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுப்பதால் நிறைய பயன்கள் உண்டு
நீங்கள் இளம் வயதிலேயே காப்பீடு செய்வதன் மூலம், பின்னர் வரும் அனைத்து நோய்களுக்கும் காப்பிடு மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.
நம் வாழ்க்கை முறையினால் நோய்கள் அதிகரித்துள்ளது
மாறி வரும் வாழ்க்கை முறையினால் இதய நோய், புற்றுநோய், நுரையீரல் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளது, இன்றைய காலக்கட்டத்தில் நிறைய இளைஞர்கள் இதுபோன்ற நோய்களினால் உயிரிழக்கின்றனர் . எனவே, சரியான நேரத்தில் தன்னை காப்பீடு செய்வது கொள்வது அவசியம். இந்த காப்பீட்டில் உங்களுக்கு வருடாந்திர ஹெல்த் செக் அப் மற்றும் மருத்துவ ஆலோசனை உதவிகளை நீங்கள் பெறலாம்.

குறைந்த பிரீமியத்தில் பாலிசி
ரூ .5 லட்சம் கவரேஜ் கொண்ட ஒரு காப்பீட்டு திட்டத்தை உங்களுக்கு 25 வயது இருக்கும்போது ரூ .5000-க்கு வாங்கலாம், 35 வயது இருக்கும்போது அதன் விலை ரூ .6000, 45 வயது இருக்கும்போது ரூ .8000 செலவாகும். எனவே குறைந்த பிரிமியத்தில் பாலிசியை வாங்க இளம் வயதிலேயே வாங்க வேண்டும்.
சேமிப்பு திட்டமாகவும் பயன்படுத்தலாம்
ஹெல்த் இன்சூரன்ஸ் முன்பே வாங்குவது சேமிப்பு என்பது மட்டுமல்லாமல், விபத்துக்கள் எந்த நேரத்திலும் நிகழலாம், எனவே போதுமான காப்பீடுதிட்டத்தை வைத்திருப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும். பிரிவு 80 டி இன் கீழ் ஆண்டிற்கு ரூ.15,000 வரை வரி சேமிப்பு செய்து கொள்ளலாம்