நடிகர் அஜித் குமாரின் “துணிவு” படத்தின் முதல் சிங்கிள் ”சில்லா சில்லா” வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் “துணிவு”. இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் சில்லா சில்லா முதல் சிங்கிள் இன்று வெளியாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு.
சில தினங்களுக்கு முன்பு இந்த பாடலின் சில நிமிடங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்திலையில் அதிகாரப்பூர்வமாக மாலை 6.30 மணிக்கு ஜி மியூசிக் யூடுயூப் பக்கத்தில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையயமைத்துள்ளார். ”சில்லா சில்லா” பாடலை அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளளார். ”காக்கா கதை” ஆல்பம் சாங் மூலம் பிரபலமான வைசாக் இந்த பாடலை எழுதி அனிருத்துடன் இணைந்து பாடியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்கும் 50வது திரைப்படம் துணிவு என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து ஜி மியூசிக் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தை பதிவு செய்துள்ளது, அதனை ரீடிவிட் செய்து ஜிப்ரான் நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் எச்.வினோத்துக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கலுக்கு விஜய்யின் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மாறி மாறி இணையத்தில் அவர்களது அப்டேட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர்.