வரலாறு முக்கியம்: மூவி ரிவ்யூ

Reading Time: < 1 minutes

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மீரா, பிரக்யா, நடிப்பில் ரொமாண்டிக் காமெடி படமாக திரையரங்குகளில் வெளியான “வரலாறு முக்கியம்” படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம்,

Image courtesy: saregama

படித்து முடித்து விட்டு யூட்டியூப் கன்டெண்ட் கிரியேட்டராக மாறவேண்டும் என்ற லட்சியத்துடன் முயற்சி செய்து கொண்டிருக்கும் கதாநாயகன், அவர் பக்கத்து வீட்டிற்கு புதிதாக வரும் மலையாள பேமிலியில் 2 பெண்கள். அக்காவை கதாநாயகன் காதலிக்க தங்கை இவரை காதலிக்க கடைசியில் யாருடன் இணைந்தார் என்பதே படத்தின் கதை.

இந்த படத்தின் கதை ஏற்கனவே நாம் பார்த்த பல படங்களை நியாபகப்படுத்தினாலும் , சில காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சுவாரசியமாக ரசிக்கும் படியாகவே இருந்தது. ஜீவா SMS படத்தில் வருவது போல் ஜாலியாக நடித்துள்ளார். காஷ்மீரா, பிரக்யா இருவரும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை அழகாக நடித்து கொடுத்துள்ளனர்.

Image courtesy: saregama

சரண்யா பொன்வண்ணன் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கும் வலு சேர்த்துள்ளனர். சான் ரகுமான் இசையில் பாடல்கள், பிண்னனி இசை ஓகே ரகம்தான். VTV கனேஷ் வழக்கம் போல் இரட்டை அர்த்த வசனங்கள் பேசியுள்ளார். அவரது கதாப்பாத்திரம் இன்னும் நன்றாக எழுதப்பட்டிருக்கலாம். ஸ்கிரீன்ப்ளேயை பொறுத்த வரை இன்னும் மெனக்கட்டிருக்கலாம் என்று தேன்றியது. படம் முழுவது இந்த 3 பேரை சுற்றியே நகர்வதால் பார்க்கும் நமக்கும் ஒருகட்டத்தில் சலிப்பு ஏற்படத்தான் செய்கிறது.

இந்த படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், இப்போது சுமாரான ரொமாண்டிக் காமெடி படம். இளைஞர்களை கவர்வதற்கான முயற்சியில் படம் எடுத்துள்ளனர். இன்னும் கதாப்பாத்திரங்களை சரியாக வடிவமைத்து மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.

Inaiya Thalaimurai Rating: 2.5/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: