ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான சோனி குரூப் கார்ப் செவ்வாய்க்கிழமை மனித ரோபோக்களை எவ்வாறு திறம்பட பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தவுடன் அவற்றை விரைவாக உருவாக்கும் தொழில்நுட்பம் தங்களிடம் இருப்பதாகக் கூறியது.
“சோனி உட்பட உலகின் பல நிறுவனங்கள் சரியான வழிமுறை எது என்று தெரிந்தவுடன் அவற்றை விரைவாக உருவாக்க போதுமான தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன” என்று சோனி தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹிரோகி கிடானோ ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சோனி ஐபோ என்ற ரோபோ நாயை முன்பே அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 1999 முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 150,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது மேலும் 2018 ஆம் ஆண்டில் அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது, முதல் ஆறு மாதங்களில் சுமார் 20,000 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க் தனது மனித ரோபோவான ஆப்டிமஸின் முன்மாதிரியை காட்சிப்படுத்தினார்.
எலன் மஸ்க்கின் நிறுவனம் ஆயிரக்கணக்கான ரோபோக்களை அதன் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கான முடிவில் உள்ளது, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான ரோபோக்களை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.
சோனி ஆடியோ- விஷுவல் தொழில்நுட்பம் மற்றும் இசை மற்றும் வீடியோ கேம்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு கண்டெண்டுகளை கொண்டுள்ளது, மெட்டாவர்ஸ் அல்லது அதிவேக மெய்நிகர் உலகங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் உள்ளது என்று கிட்டனோ கூறினார்.
“மெட்டாவெர்ஸைப் பொறுத்தவரை, நீங்கள் ஒரு இடத்தை உருவாக்கி காட்டுவது போல இல்லை … மெட்டாவெர்ஸை கண்டெண்ட்தான் உருவாக்குகிறது மற்றும் அழிக்கிறது.” என்றும் அவர் கூறியுள்ளார்