பிரிட்டன் முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், உறையும் நிலைக்கு வெப்பநிலை கீழறங்கியுள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக முக்கியமான, பரபரப்பான ஹீத்ரு விமான நிலையத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர்ந்த பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கடுமையான பனிப்பொழிவால் ரயில் போக்குவரத்தும், சாலைப் போக்குவரத்தும்கூட பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்தக் கடுமையான பனிப்பொழிவு அடுத்த சில நாள்களுக்குத் தொடரும் என்று பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

ஆபத்தான நிலைமைகளில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு நினைவூட்டிய அந்நாட்டு அரசு, பர்மிங்காம் அருகே ஒரு விபத்து நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது
“பனி மூடிய ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நான்கு குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்” என்று வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு ஸ்காட்லாந்தில், மைனஸ் 15 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பநிலை குறையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது