1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையொட்டி
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6-ந்தேதி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் 1200க்கும் மேற்பட்ட காவலர்கள்
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன்
பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி ஆரல் வாய்மொழி, களியக்காவிளை, அஞ்சு கிராமம் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுக் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை
செய்யப்பட்டு வருகிறது.


இரவு நேரங்களிலும் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது