தமிழகத்தில் உள்ள யானை பாகன்களை தாய்லாந்திற்கு அனுப்பவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள யானைகளை சிறப்பாக பராமரிக்க 13 பாகன்கள் மற்றும் வனச்சரகர்களுக்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையதிற்கு பயிற்சி பெற அனுப்ப தமிழக அரசு முடிவு செய்தது. இதனை ரத்து செய்ய கோரி வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
யானைகளை அடக்குவதிலும், பயிற்சி அளிப்பதிலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பல திறமைகளை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் சிறிய நாடான தாய்லாந்திற்கு பயிற்சி பெற அனுப்புவது தேவையற்றது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்திற்கு பயிற்சிக்கு செலவாகும் தொகையை மூத்த பாகன்களுக்கு ஊக்க தொகையாக வழங்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையம் வழக்கோடு சேர்த்து இந்த வழக்கையும் 14ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.