அஜீத் குமார் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கும் ‘துணிவு’ படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் ரிலீஸ் குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘துணிவு’. நடிகர் அஜித் ஜோடியாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான்.
படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ‘சில்லா சில்லா’ தொடர்பான தகவல் முன்னமே வெளியானது. ஜிப்ரான் இசையில் வைசாக் எழுத்தில், அனிருத் குரலில் ஒரு பவர் ஃபுல் பாடலாக உருவாகியிருக்கிறது இந்தப்பாடல்.
இந்த பாடல் எப்போது வெளியாகும் எனும் அறிவிப்பிற்காக மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. ஆம் சில்லா சில்லா பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு தான் அந்த அற்புதமான சர்ப்ரைஸ்.
Super