- திருவண்ணாமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் மொத்தம் 1200 பேருந்துகளை நிறுத்தலாம்.
- 59 கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 12,500 கார்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 2692 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வழக்கமாக திருவண்ணாமலையில் 9 ரயில்கள் இயங்கும் நிலையில் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
- திருவண்ணாமலையில் 15 அவசர ஊர்திகள், 10 பைக் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. 26 தீயணைப்பு வாகனங்களுடன் 600 வீரர்கள் உள்ளனர்.
- காவல் பணியில் 12,000 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
- 2955 தூய்மைபணியாளர்கள் உள்ளனர். 158 இடங்களில் பக்தர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலையின் 85 இடங்களில் 423 பொதுகழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மகாதீபம்: பக்தர்களுக்கான ஏற்பாடுகள்

Reading Time: < 1 minutes