தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் கிளை அஞ்சல் அலுவலகங்களில் காலியாக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் கிராம அஞ்சல் பணிகளுக்கு மொத்தம் 3,167 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிப்ரவரி 16ம் தேதி விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை காலியிடங்கள் உள்ளன, எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.
Division | Vacancy |
Vellore Division | 39 |
Tuticorin Division | 76 |
Tiruvannamalai Division | 129 |
Tirupattur Division | 68 |
Tirunelveli Division | 94 |
Tiruchirapalli Division | 113 |
Theni Division | 65 |
Thanjavur Division | 75 |
Tambaram Division | 111 |
Sivaganga Division | 47 |
salem west division | 76 |
Salem East Division | 95 |
RMS T Division | 5 |
RMS MA Division | 3 |
RMS M Division | 2 |
RMS CB Division | 13 |
Ramanathapuram Division | 77 |
Pudukkottai Division | 74 |
Pondicherry Division | 111 |
Pollachi Division | 51 |
Pattukottai Division | 53 |
Nilgiris Division | 54 |
Namakkal Division | 111 |
Nagapattinam Division | 65 |
Mayiladuthurai Division | 56 |
Madurai Division | 99 |
Krishnagiri Division | 76 |
Kovilpatti Division | 71 |
Karur Division | 55 |
Karaikudi Division | 31 |
Kumbakonam Division | 48 |
Kanniyakumari Division | 73 |
Kanchipuram Division | 87 |
Erode Division | 100 |
Dindigul Division | 74 |
Cuddalore Division | 113 |
Dharmapuri Division | 72 |
Coimbatore Division | 74 |
Chengalpattu Division | 70 |
Srirangam Division | 73 |
Srirangam Division | 53 |
காலியிடங்கள்: 3167
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பிக்க விரும்புவோர் வயது வரமபு 18 – 40க்குள் இருக்க வேண்டும்.
- உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.
- மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்ச்சி மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும்.
ஊதியம் மற்றும் படிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM – BranchPostmaster BPM) பதவிக்கு – ரூ. 12,000 முதல் 29,380 வரை ஊதியம் வழங்கப்படும். உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster – ABPM /Dak Sevak) – ரூ. 10,000 முதல் 24,470/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை?
இப்பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகப்புப் பக்கத்தில், Registration- ஐ கிளிக் செய்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், குறித்த விவரங்களை நிரப்பி, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.