ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இன்று நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி ஜோடி 29 ரன்கள் குவித்தது. பெத் மூனி மற்றும் தஹ்லியா மெக்ராத் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் காரணமாக ஆஸ்திரேலியா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது, அதனை தொடர்ந்து இது இரண்டாவது டி 20 அதிகபட்ச ஸ்கோராகும்.
இதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 79 ரன்களை அடித்து அதிரடியாக விளையாடினார். பவர்பிளேவில் இந்திய அணி 55 ரன்கள் எடுத்தது. ஷஃபாலி வர்மா 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வைத்யா ஒரு சிக்ஸரை அடித்து போட்டியை சூப்பர் ஓவருக்கு அனுப்பினார்.. இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 2 சிக்சருடன் 20 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 17 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இப்போது இந்திய மகளிர் அணி இந்த தொடரை 1-1 என்ற கண்க்கில் சமன் செய்துள்ளது.