வித்தியாசமான கெட் அப்பில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா! கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்த ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், பாபி சிம்ஹா இந்த படத்திற்க்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அந்த ஆண்டு வென்றார்.

அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “பேட்ட” திரைப்படத்தை எடுத்தார். ரஜினி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட அந்த படம் இவருக்கு மிகப்பெரிய பேரை பெற்று தந்தது. பின்னர் தனுஷை வத்து எடுத்த “ஜகமே தந்திரம்” நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து இவர் இயக்கிய “மகான்” பிரைம் OTT தளத்தில் ரிலீஸ் ஆனது இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் “ஜிகர்தண்டா” இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரில் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் வித்தியாசமான கெட் அப்பில் உள்ளனர். மாஸான பிண்ணனி இசையில் ராகவா லாரன்ஸ் ஆயுதங்களுடன் எண்ட்ரி கொடுப்பதும், எஸ் ஜே சூர்யா பெரும் கூட்டத்தை லாரன்ஸை நோக்கி அனுப்பி வைப்பதாக அந்த காட்சி முடிகிறது. ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கும் இந்த படத்திற்கு செரிஃப் ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.