இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இளைஞர்கள் கொண்டாடிய “லவ் டுடே” திரைப்படத்தின் சொல்லுங்க மாமாக்குட்டி படத்தின் வீடியோ பாடல் வெளியானது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து தியேட்டர்களில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த லவ் டுடே படத்தின் சொல்லுங்க மாமாக்குட்டி வீடியோ பாடல் சோனி மியூசிக் இந்தியா இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ஆதித்யா டீவி கதிர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நன்றாக புரிந்துகொண்டு வைத்துள்ளோம் என்று நினைத்து வாழும் காதலர்களின் மொபைல் போனை ஒருநாள் மாற்றிக்கொண்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நகைச்சுவை கலந்து மிகவும் ரசிக்கும் விதமாக எடுத்துள்ளார் பிரதீப். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் இசை இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ். சொல்லுங்க மாமாக்குட்டி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட். பிரதீப்பின் நடிப்பு மற்றும் பிண்ணனி இசை தியேட்டரில் அனைவரது கைதட்டயும் பெற்று ரசிக்க வைத்தது.

தமிழில் பெற்ற வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப்பிங் செய்து இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டது. தெலுங்கு ரசிகர்களாலும் இந்த திரைப்ப்டம் கொண்டாடப்பட்டது. நெட்ப்ளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 2 ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் இந்த பாடலின் வீடியோவை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.