சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தியேட்டரில் ரிலீசான இந்த படம் இன்றைய காலகட்ட ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்பதை ரிவியூவில் பார்க்கலாம்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2002 ம் ஆண்டு ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் மற்றும் பலர் நடித்து வெளியான படம் “பாபா”. இன்று அதிகாலை 4 மணி காட்சிக்கு ரசிகர்கள் திரண்டு வந்தனர். ஹீரோவிற்கு கிடைக்கும் மந்திரங்கள் அதை அவர் எதற்கு பயன்படுத்தினார், அதன் விளைவுகள் என்ன என்பதே கதை. 2002 வெர்ஷனில் அவருக்கு 7 மந்திரங்கள் கிடைக்கும், லேட்டஸ்ட் வெர்ஷனில் 5 மந்திரமாக மாற்றியுள்ளார்கள்.
இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இன்னும் எத்தனை வருடம் கழித்து வந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவர்தான் இந்த மொத்த படத்தையும் தன்னுடைய ஸ்கிரீன் ப்ரசன்ஸால் தாங்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கவுண்டமணியை திரையில் பார்க்க கிடைத்ததே மகிழ்ச்சி. அவரது காமெடி டயலாக்குகள் எத்தனை முறை முன்பு பார்த்திருந்தாலும் இப்போதும் சிரிப்பு வருகிறது.

ஏ.ஆர். ரகுமானின் இசையில் பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை தியேட்டரையே அதிர வைக்கிறது. பாடல்கள் காட்சிபடுத்தப்பட்ட விதமும் சிறப்பு. படத்தில் வரும் அனைத்து வசனங்களுமே ரசிகர்களிடம் கிளாப்ஸ் வாங்குகிறது.
சில சீன்கள் கட் செய்யப்பட்டுள்ளது, சில மாற்றப்பட்டுள்ளது அதனை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மொத்தத்தில் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு அவர் பிறந்த நாள் ட்ரீட். பாபா ரீ-ரிலீஸை ரசிகர்கள் இன்று டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.