சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக இதுவரை 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா
இந்திய அணி, வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கடைசியாக களமிறங்கிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடித்து 51 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா. இதனை ரோகித் சர்மா கிரிக்கெட் ரசிகர்கள் பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இதுவரை ரோகித் சர்மா டி20 தொடரில் 182 சிக்சர்களும், டெஸ்ட் தொடரில் 64 சிக்சர்களும், ஒருநாள் போட்டிகளில் 256 சிக்சர்களும் அடித்துள்ளார்.
அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெயில் இதுவரை 553 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா இப்போது இந்த பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.