கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல், இன்று வரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
ஞாயிற்றுகிழமையான நேற்று 55,145 பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 58,480 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோயில் நடை திறக்கப்பட்டு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 89,737 பேர் சாமிதரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.