இலங்கை அரசு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்கான கோவிட் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இப்போது அதனை முற்றிலுமாக நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அதனை முற்றிலுமாக நீக்கியுள்ளாதாக அறிவிப்பை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, அந்த குறிப்பில் கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் இனி அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் பிசிஆர் மற்றும் ராட் கோவிட் சோதனை ரிப்போர்ட் தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வந்த பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் தனியார் மருத்துவமனை, ஓட்டல் அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்குமாறு சுகாதார அமைச்சகம் வழியுறுத்தி உள்ளது.மேலும், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.