கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார். அன்று கோவாவிற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, இதைத்தவிர பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

பிரதமர் மோடி டிசம்பர் 11ம் தேதி கோவா வந்து மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை தொடங்கி வைக்கிறார். மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார். வடக்கு கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத் (உத்தர பிரதேசம்) தேசிய யுனானி மருத்துவக் கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.