கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”

Reading Time: < 1 minute

தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த ‘சாணிக்காயிதம்’ படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘தசரா’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், இவர் தற்போது ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ‘ரகு தாத்தா’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ரகு தாத்தா படக்குழு ‘ரகு தாத்தா’ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ‘புரட்சி வீட்டில் இருந்து தொடங்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், படக்குழுவினருடன் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

One thought on “கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரகு தாத்தா”

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d