வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நள்ளிரவு, ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நள்ளிரவு மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது.
அதன்படி, தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் டிசம்பர் 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய இடங்களில் டிசம்பர் 9ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஸ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 10 ம் தேதி கன மழை பெய்யும் என்று ஆரஞ்ச் அலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 துறைமுகங்களில் 4, 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை துறைமுகத்தில் 4 மற்றும் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.