கணவருடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

Reading Time: < 1 minutes

நடிகை ஹன்சிகா, அவரது நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரை கரம் பிடித்தார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்வர் நடிகை ஹன்சிகா. தமது நண்பர் சோஹேல் கத்தூரியாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் ஹன்சிகாவிற்கு, கடந்த டிசம்பர் 2ம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடைபெற்றன. முதல் நாளில் மெகஹந்தி நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் சங்கீத் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மஞ்சள் வைக்கும் சடங்கை தொடர்ந்து நேற்று இரவு திருமணம் நடைபெற்றது.

சிந்தி முறைப்படி நடைபெற்ற ஹன்சிகா திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இருவரது திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில், திரையுலகினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: