உலகின் நம்பர்.1 பணக்காரர் என்ற பட்டத்தை இழந்தார் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உரிமையாளரான எலான் மஸ்க்.
டிவிட்டர் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் சி.இ.ஓ எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் சரிவு மற்றும் டிவிட்டர் நிறுவனத்தை ரூ. 3.5 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியதால் ஏற்பட்ட நஷ்டத்தாலும் நம்பர் 1 பணக்காரார் பட்டத்தை இழந்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்த பட்டியலில் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தில் செய்த முதலீடும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததுமே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதலிடத்தில் இருந்த மஸ்க் இப்போது இரண்டாவது இடத்தில் ரூ. 15.28 கோடி சொத்து மதிப்புடன் உள்ளார். அவரது பங்குகளின் விலை உயர்ந்தால் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து டெஸ்லாவின் பங்குதாரர்கள் மஸ்க் டிவிட்டரில் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்குகள் குறைய காரணமாக இருந்தது என்று கூறியுள்ளனர்.
டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியதும் எலான் மஸ்க் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடதக்கது.