இயர்போனில் கிளிக் சத்தம் கேட்கிறதா? அலர்ட் செய்யும் மருத்துவர்கள்

Reading Time: 2 minutes

இன்றைய காலக்கட்டத்தில் இயர்போன் பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்று கூறலாம். வேலைக்கு செல்லும் போது, உடற்பயிற்சி செய்யும் போது மற்றும் இரவில் உறங்கும் முன்பு வரை இயர் போன் அணிந்து இசை கேட்கிறோம். ஆனால் இயர்போன்களைப் பயன்படுத்தும் போது கிளிக் செய்யும் ஒலிகளைக் என்றாவது உங்களுக்கு கேட்டுள்ளதா?

சில நேரங்களில் இது இயந்திர குறைபாடாக இருக்கலாம்; ஆனால் ஜில் கென்டன் என்பவருக்கு இது ஆபத்தாக அமைந்தது. 52 வயது கொண்ட ஜில் கெண்டன் என்ற பெண் இயர்போன்களைப் பயன்படுத்தும் போது காதுகளில் கிளிக் செய்யும் ஒலி கேட்பதோடு தனது முக வீக்கத்தையும் கவனித்தார். இதனையடுத்து அவர் பரிசோதனை செய்த போது அவருக்கு Low grade tumour இருப்பது கண்டறியப்பட்டது. அவர் முதலில் தனது இடது கண்ணின் பக்கத்தில் லேசான வீக்கத்தைக் கவனிக்கத் தொடங்கியுள்ளார்.

அவரது கண்களில் வறட்சியைக் கவனித்த பிறகு, மருத்துவரை அணுகி பரிசோத்னை மேற்கொண்டதில் அவருக்கு intraosseous meningioma (low-grade tumour) இருப்பது கண்டறியப்பட்டது. ஜில் கென்டனுக்கு ஆறு முதல் ஐந்து சென்டிமீட்டர் மூளைக் கட்டி (Brain Tumour) இருந்தது, இது அவரது மண்டை ஓட்டில் உள்ள ஆப்டிகல் நரம்பை பாதித்தது.

இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், அவருக்கு புற்றுநோய் 10 ஆண்டுகளாக இருந்துள்ளது. இதனை அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கலாம். இதற்கான அறுவை சிகிச்சையின் போது, அவரது பார்வையைக் காப்பாற்றுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மூளைக் கட்டி (Brain Tumour) என்றால் என்ன?


மூளைக் கட்டி அல்லது மூளை புற்றுநோய் என்பது சேதமடைந்த செல்கள் மூளையில் கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும் போது உடலின் முக்கிய உறுப்பின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கும், மூளைத் திசுக்களையும் சேதப்படுத்தக் கூடியது. பெரும்பாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காதுகளில் கிளிக் செய்வது போன்ற ஒலிகள் இரண்டு காதுகளிலும் கேட்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த ஒலி இரைச்சல் மற்றும் கர்ஜனை ஒலிகளை ஒத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூளைக் கட்டியின் அறிகுறிகள் யாவை?

  • தலைச்சுற்றல்
  • காது பிரச்னைகள்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • பேச்சு பிரச்சினைகள்
  • தொடர்ச்சியான தலைவலி
  • பார்வை கோளாறுகள்

பொறுப்புத்துறப்பு: கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனையாக கருதப்படக்கூடாது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் அல்லது உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d