அட்டகத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித், அவரது பிறந்தநாளை முட்டிட்டு பட நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தை விக்ரம் ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

பா.ரஞ்சித் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். பின்பு அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற வெற்றி படங்கள் மூலம் தனக்கென்று தனி அடையாளத்தை கொண்டவர். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து காலா, கபாலி போன்ற மாஸ் திரைப்படங்களில் தனது கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தியிருந்தார். சர்பேட்டா பரம்பரை அமேசான் 0TT-ல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, அதில் உள்ள அனைத்து கேரக்டர்களையும் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். அவரது சமீபத்திய திரைப்படம் ”நட்சத்திரம் நகர்கிறது” மக்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தையே பெற்றது.
இப்போது அவர் நடிகர் விக்ரமுடன் இணைந்து ”தங்கலான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்கசுரங்கம் பற்றியும் அந்த மக்களின் வாழ்வியல் குறித்தும் விளக்கும் பீரியட் படமாக எடுத்து வருகிறார். கமல்ஹாசனைப் போல உடலை வருத்தி நடிக்கக்கூடிய நடிகர்களில் விக்ரமும் ஒருவர். அதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகன், பார்வதி மற்றும் பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இன்று பா.ரஞ்சித் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாழ்த்துக்கள் கூறி ட்வீட் செய்துள்ளது. அந்த டிவீட்டில் ரஞ்சித்துடன் விக்ரம் இருக்கும் புகைப்ப்டத்தை சியான் விக்ரம் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.